வளர்ப்பு பூனை பிடிக்க முயன்ற போது கிணற்றில் தவறி விழுந்து பெயிண்டர் பலி
வளர்ப்பு பூனை பிடிக்க முயன்ற போது கிணற்றில் தவறி விழுந்து பெயிண்டர் பலி
வளர்ப்பு பூனையால் வந்த வினை : ஓடிச் சென்று பிடிக்க முயன்ற போது கிணற்றில் தவறி விழுந்து பெயிண்டர் பலி - கோவையில் நடந்த சோகம் !!!
*கிணற்றில் இருந்த பாம்பு மற்றும் பூனையை பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள்*
கோவை அருகே, நரசிம்மநாயக்கன் பாளையம், கொல்லனூர் வடக்கு தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்தி. பெயிண்டர் தனது வளர்ப்பு பிராணியான பூனையைப் பிடித்து அங்கு உள்ள தோட்டத்திற்குச் சென்று உள்ளார். அப்பொழுது அங்கு இருந்த கிணற்றின் ஓரத்துக்கு அந்த பூனை சென்று உள்ளது. கார்த்தியும் விடாமல் அதனை பின் தொடர்ந்து சென்று பூனையை பிடித்தார். ஆனால் எதிர்பாராத விதமாக பூனையுடன் சேர்ந்து அவர் அந்த 150 அடி ஆழம் உள்ள கிணற்றில் தவறி விழுந்தார். நீச்சல் தெரியாததால் கார்த்தி நீரில் மூழ்கினார். அந்த பூனை கிணற்றின் மணல் திட்டில் அமர்ந்து கொண்டது. ஆனால் வெளியேற முடியவில்லை, அதன் அருகே தண்ணீர் பாம்பு ஒன்று இருந்து உள்ளது. இது பற்றி தகவல் அறிந்து பெரியநாயக்கன் பாளையம் போலீசார், தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தேடிய போது கார்த்தியை பிணமாக மீட்டனர். பாம்பு மற்றும் பூனையை உயிருடன் மீட்டனர். போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.
What's Your Reaction?