தேனியில் தேர்தல் முன் விரோதம் : தி.மு.க கவுன்சிலர் மனைவியை, அ.ம.மு.க நிர்வாகி குடும்பத்தினருடன் வீடு புகுந்து தாக்குதல் - சி.சி.டி.வி காட்சி !!!

தாக்குதல் நடத்தியவர்கள் மீது தேனீ போலீசார் வழக்கு பதிவு
தேனி, கருவேல் நாயக்கன்பட்டியில் வசித்து வருபவர் கடவுள். இவர் தேனி - அல்லிநகரம் நகராட்சி 33 வது வார்டு தி.மு.க கவுன்சிலராக இருக்கின்றார்.
இந்நிலையில் கடந்த நகர்மன்ற தேர்தலின் போது இதே பகுதியை சேர்ந்த அம்சராஜன் என்பவர் அ.ம.மு.க சார்பில் கடவுளை எதிர்த்து போட்டியிட்டார்.
அப்போது இருவருக்கும் தேர்தல் விரோத போக்கு இருந்து வந்தது. மேலும் இருவருக்கும் இடையே நிலம் தகராறும் இருந்து வந்தது. இதனால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்படும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் தி.மு.க கவுன்சிலர் கடவுளின் மனைவி ராஜேஸ்வரி மற்றும் அவரது மகன் முத்து மணி ஆகிய இருவரும் வீட்டில் தனியாக இருந்த போது. அம்சராஜன் அவரது மனைவி லீலாவதி மற்றும் உறவினர்கள் ஆகியோர் கம்புகளுடன் அவர்களை தாக்கினர். பின்னர் அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் அவர்களை தடுத்து அவர்களிடம் இருந்து ராஜேஸ்வரி காப்பாற்றிச் சென்றனர். பின்னர் இது குறித்து ராஜேஸ்வரி தேனி காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததன் அடிப்படையில் தேனி போலீசார் அம்சராஜன் மற்றும் அவரது மனைவி லீலாவதி மற்றும் அவர்களது உறவினர் பிரபு ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .
இந்நிலையில் தாக்குதல் தொடர்பான சி.சி.டி.வி காட்சிகள் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
What's Your Reaction?