கோவை வேளாண் பல்கலைக் கழகம், சாலையில் புகுந்த மழை நீர் - வெள்ளத்தில் தத்தளித்து செல்லும் வாகன ஓட்டிகள்

கோவை வேளாண் பல்கலைக் கழகம், சாலையில் புகுந்த மழை நீர் - வெள்ளத்தில் தத்தளித்து செல்லும் வாகன ஓட்டிகள்

Oct 15, 2024 - 15:21
 0  4
கோவை வேளாண் பல்கலைக் கழகம், சாலையில் புகுந்த மழை நீர் - வெள்ளத்தில் தத்தளித்து செல்லும் வாகன ஓட்டிகள்
கோவை வேளாண் பல்கலைக் கழகம், சாலையில் புகுந்த மழை நீர் - வெள்ளத்தில் தத்தளித்து செல்லும் வாகன ஓட்டிகள்

கோவையில் பெய்த கன மழை : வேளாண் பல்கலைக் கழகம், சாலையில் புகுந்த மழை நீர் - வெள்ளத்தில் தத்தளித்து செல்லும் வாகன ஓட்டிகள் !!!

கோவை, வடவள்ளி லாலி ரோடு பகுதியில் உள்ளது. தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகம், இங்கு ஆயிரக் கணக்கான மாணவ - மாணவர்கள் பயின்று வருகின்றனர். மேலும் மருதமலை செல்லுகின்ற முக்கிய சாலையாக உள்ளது இந்த சாலை, நாள்தோறும் பல ஆயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வரும் இந்த முக்கிய சாலையில் கடந்த சில நாட்களாக பெய்த கன மழையின் காரணமாக மழை நீர் சாலையில் தேங்கி உள்ளது. மேலும் அங்குள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தில் நேற்று அதிகபட்சமாக 6.86 சென்டி மீட்டர் மழை பதிவான நிலையில், வளாகத்திற்குள் மழை நீர் புகுந்தது, மேலும் பல்கலைக் கழகத்தின் உழவர் நலத் துறை ஆய்வகங்களில் மழை நீர் புகுந்து உள்ளது. இந்த மழை நீர் சாலை முழுவதும் தேங்கி உள்ளதால், வாகன ஓட்டிகள் வெள்ளத்தில் தத்தளித்து வாகனத்தை சிரமத்துடன் ஓட்டி கடந்து செல்கின்றனர். தண்ணீர் வெளியேற அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow