சாலையில் மீன் பிடித்து விளையாடிய கோவை மக்கள்
சாலையில் மீன் பிடித்து விளையாடிய கோவை மக்கள்

சாலையில் மீன் பிடித்து விளையாடிய கோவை மக்கள்.
கோவையில் பெய்த தொடர் மழை எதிரொலியாக சுங்கம் வாலாங்குளத்தில் இருந்த பெரிய, பெரிய மீன்கள் சில சாலையில் அடித்து வரப்பட்டன.
வடகிழக்கு பருவமழை தொடர்பாக முன் கூட்டியே எச்சரிக்கை விடப்பட்ட நிலையில், கோவை வரலாறு காணாத அளவிற்கு வெள்ளக்காடாக மாறி உள்ளது.
தொடர் மழை காரணமாக கோவையில் குளங்கள் நிரம்பி வருகின்றன. அதன் ஒரு பகுதியாக திருச்சி சாலையை ஒட்டி சுங்கம் பகுதியில் உள்ள வாலாங்குளத்திலும் நீரின் அளவு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு உபரி நீர் வடிகால் வழியே வெளியேறி வருகிறது. இத்தகைய சூழலில் திருச்சி சாலையில் சில இடங்களில் அடைப்பு ஏற்பட்டு மழை நீருடன் கழிவு நீரும் பிரதான சாலையில் வெளியேறியது. அப்போது பெரிய, பெரிய மீன்களும் சாலையில் அடித்து வரப்பட்டன. அவற்றை வாகன ஓட்டிகளும், உள்ளூர் வாசிகளும் உற்சாகத்துடன் பிடித்து சென்றனர். அந்த வீடியோக்கள் தற்பொழுது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
What's Your Reaction?






