இரு தரப்பு பிரச்சனை மூடப்பட்ட காளிக் கோவில் : 13 ஆண்டு பின் ஆடு, கோழி பலியிட்டு கோவில் திறப்பை கொண்டாடிய கிராம மக்கள் !!!
இரு தரப்பு பிரச்சனை மூடப்பட்ட காளிக் கோவில் : 13 ஆண்டு பின் ஆடு, கோழி பலியிட்டு கோவில் திறப்பை கொண்டாடிய கிராம மக்கள் !!!
இரு தரப்பு பிரச்சனை : மூடப்பட்ட காளிக் கோவில் : 13 ஆண்டு பின் ஆடு, கோழி பலியிட்டு கோவில் திறப்பை கொண்டாடிய கிராம மக்கள் !!!
இரு தரப்பு பிரச்சனையில் சினிமா பாணியில் மூடப்பட்ட காளிக் கோயில், 13 ஆண்டு பிரச்சனைக்கு முற்றுப் புள்ளி வைத்த பெண் தலைவர். ஆடு, கோழி பலியிட்டு, படையிலிட்டு கோவில் திறப்பை கொண்டாடிய கிராமத்தினர்.
வேலூர் மாவட்டம், K.V. குப்பம் தாலுக்கா காளாம்பட்டு என்ற காட்டு பகுதியில் இயற்கை எழில் சூழ மூலிகை மனத்தோடு சக்தி காளியம்மன் திருக்கோவில் அமைந்து உள்ளது. ஆந்திர எல்லை பகுதியை ஒட்டி அமைந்து உள்ள இந்த கோவில் சுமார் 300 வருடங்களாக கூரை ஓலையில் இருந்து வந்தது. 13 வருடங்களுக்கு முன்பு சுற்று வட்டராத்தை சேர்ந்த 7 கிராம பொது மக்கள் ஒன்று கூடி கோவிலுக்கு சுற்று சுவர் மற்றும் காங்கீரிட் கூரை அமைத்து குடமுழுக்கு செய்தனர். சில மாதங்கள் பூஜை நடந்த நிலையில் அப்பொழுது கோவிலை யார் நிர்வாகம் செய்வது என்று எழுந்த பிரச்சனையில் கலவரம் ஏற்படும் நிலை ஏற்ப்பட்டு, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு இரு தரப்பினரும் நீதி மன்ற உத்தரவை பெற்று வாருங்கள் என்று சினிமா பாணியில் கோவிலை மூடி சீல் வைத்தனர்.
பிறகு நவராத்திரி கொலு வைக்க மட்டும் சிறப்பு அனுமதி பெற்று வருடத்தில் 9 நாட்கள் கொலு வைக்கப்பட்டு பின்பு 10 வது நாள் கோவில் மூடப்பட்டு சீல் வைக்கப்படும். 13 ஆண்டுகள் நீடித்த
இந் நிலையில் தற்போது பஞ். தலைவராக உள்ள பானுப்பிரியா அவர்கள் மிகுந்த சிரமப்பட்டு, ஊர் நடுநிலையாளர்கள் மற்றும் பெரியோர்கள், துணையோடு, நீதி மன்ற உத்தரவு வரும் பொழுது அதற்க்கு கீழ் பணிகிறோம், தற்போது கோவிலை திறங்கள் என்ற கோரிக்கையோடு தொடர்ந்து போராடி அந்த போராட்டத்தில் வெற்றி பெற்று காலை மாலை இரு வேலையிலும் கோவில் திறந்து பூஜைகள் நடத்த, மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்க வைக்கப்பட்ட கோரிக்கையில் தற்போது மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கி கோவிலை திறந்தனர்.
கோவில் திறந்த மகிழ்ச்சியில் ஊர் பொது மக்கள் ஆடு கோழி பலியிட்டு காளி அம்மனுக்கு படையலிட்டு பின்பு அனைவருக்கும் கறி விருந்து வழங்கினர். இன்று பிற்பகல் தொடங்கிய இந்த விருந்து இரவு முழுவதும் நடந்து வருகிறது.
சினிமா பாணியில் இரு தரப்பு பிரச்சனையில் மூடப்பட்ட காளிக் கோவிலை திறந்த தலைவர் பானுப்பிரியாவிற்க்கு பல்வேறு தரப்பில் பாரட்டுக்கள் குவிந்து வருகிறது. இது கூறித்து ஒரு கோவிலும் மூடப்படக்கூடது என்ற சீரிய நோக்கோடு செயல்படும்தமிழக அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்க்கும் தனது மனமார்ந்த நன்றியினை பெண் தலைவர் தெரிவித்து கொண்டார்.
What's Your Reaction?