கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை : நோயாளிகள் பயன்பாட்டிற்கா கொடுக்கப்பட்ட ஸ்ட்ரெச்சர், சக்கர நாற்காலிகளில், மருத்துவ குப்பை கழிவுகளை எடுத்துச் செல்லும் அவல நிலை !!!*
கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை : நோயாளிகள் பயன்பாட்டிற்கா கொடுக்கப்பட்ட ஸ்ட்ரெச்சர், சக்கர நாற்காலிகளில், மருத்துவ குப்பை கழிவுகளை எடுத்துச் செல்லும் அவல நிலை !!!*
*கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை : நோயாளிகள் பயன்பாட்டிற்கா கொடுக்கப்பட்ட ஸ்ட்ரெச்சர், சக்கர நாற்காலிகளில், மருத்துவ குப்பை கழிவுகளை எடுத்துச் செல்லும் அவல நிலை !!!*
கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், நாள்தோறும் 6,500 முதல் 7,000 புற நோயாளிகள் வந்து செல்கின்றனர். புதிதாக கட்டப்பட்டு உள்ள மருத்துவ வளாகத்தையும் சேர்த்து 3,200 மருத்துவ படுக்கை வசதிகள் உள்ளன. இவ்வளவு பரபரப்பு வாய்ந்த இந்த கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை, கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு உள்ளிட்ட மாவட்ட மக்களும் பயன்படுத்தி வருகின்றனர். நாள்தோறும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஏராளமான குப்பைகள் மற்றும் மருத்துவ கழிவுகள் சேகாரமாகும். இதனை துப்புரவு செய்வதற்காக கிறிஸ்டல் என்ற தனியார் நிறுவனத்திற்கு குத்தகை விடப்பட்டு உள்ளது. உணவு கழிவுகள் மற்றும் மருத்துவ கழிவுகளை மூட்டையாக கட்டி, அதற்கான வாகனத்தில் இந்த நிறுவனம் எடுத்துச் செல்வதில்லை என புகார் கூறப்படுகிறது. நடக்க முடியாத நோயாளிகள் பயன்பாட்டிற்காக கொடுக்கப்பட்டு உள்ள ஸ்ட்ரெக்சர் மற்றும் சக்கர நாற்காலிகளில், இந்த குப்பைகளை இந்நிறுவனம் எடுத்துச் செல்கின்றனர். இதனால் நோயாளிகள் சக்கர நாற்காலியை பயன்படுத்த முடியாமல், உறவினர்கள் தூக்கிச் செல்லும் அவல நிலை நாள்தோறும் நடைபெறுகிறது. இது குறித்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் டாக்டர் நிர்மலாவிடம் கேட்ட போது, தனியார் நிறுவனத்திற்கு குப்பை அள்ளும் குத்தகை கொடுக்கப்பட்டு இருப்பதாகவும், மருத்துவமனை வளாகம் சுத்தமாக இருப்பதாக தெரிவித்தார். எனினும் இந்த புகார் குறித்து உடனடியாக விசாரணை நடத்துவதாக தெரிவித்து உள்ளார். ஸ்ட்ரெக்சர் மற்றும் சக்கர நாற்காலிகள், குப்பைகளுக்கா நோயாளிகளுக்கா என்ற சந்தேகம் ஏற்பட்டு உள்ளது.
What's Your Reaction?