வளர் இளம் பெண்களுக்கு பாலின கல்வி, தொழிலாளர் நலச் சட்டங்கள் பற்றிய பயிற்சி
வளர் இளம் பெண்களுக்கு பாலின கல்வி, தொழிலாளர் நலச் சட்டங்கள் பற்றிய பயிற்சி
வளர் இளம் பெண்களுக்கு பாலின கல்வி, தொழிலாளர் நலச் சட்டங்கள் பற்றிய பயிற்சி !!!
கோவை மாவட்டம், வால்பாறையில் கேர்டியின் பயனாளிகளுக்கு வளர் இளம் பெண்களுக்கான பாலியல் கல்வி மற்றும் தொழிலாளர் நலச் சட்டங்கள் பற்றிய பயிற்சி வகுப்பு கேர்டியின் மாநில ஒருங்கிணைப்பாளர் மெல்வின் தலைமையில் தனியார் அரங்கில் நடைபெற்றது. இந்த பயிற்சி வகுப்பில் வழக்கறிஞர் முருகன் கலந்து கொண்ட நிலையில் மெல்வின், வால்பாறை ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ் கண்ணன், கார்த்திகா, ஞானத்தாய் ஆகியோர்களால் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சியில் பாலின கல்வி பற்றியும் , ஆண், பெண் சமம் பாலின வேறுபாடுகள், சமூக மாற்றங்கள் பாலின உள் புகார் பற்றியும், தொழிலாளர் நலச் சட்டங்கள் எதற்காக உருவாக்கப்பட்டன அதனால் தொழிலாளர்களுக்கு ஏற்படும் நன்மைகள் குறித்தும் விரிவாக எடுத்துக் கூறப்பட்டது. முன்னதாக சமூக பணியாளர்சி கார்த்திகா அனைவரையும் வரவேற்ற நிலையில் பயிற்சி முடிவில் தையல் ஆசிரியர் ஞானத்தாய் நன்றி கூறினார்.
What's Your Reaction?