கண்ணீர் மல்க சாதி சான்றிதழ் கேட்டு பள்ளி குழந்தைகளுடன் வந்த பழங்குடி இன மக்கள் : விண்ணப்பித்தும் எந்த காரணம் இன்றி நிராகரிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு - பழனி சார் ஆட்சியரிடம் மனு அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது !!!

பழனி அருகே குதிரையாறு அணை, புளியம்பட்டி ஆகிய பகுதியில் மலை வாழ் குடியிருப்புகள் உள்ளன. இங்கு ஏராளமான மக்கள் வசிக்கின்றனர். இங்கு உள்ள மக்கள் கூலி வேலை செய்து வாழ்கை நடத்துகின்றனர். இந்த நிலையில் குதிரையாறு அணை மற்றும் புளியம்பட்டி பகுதியை சேர்ந்த மக்கள் பள்ளி படிக்கும் தங்களின் குழந்தைகளுடன் பழனி சப்-கலெக்டர் அலுவலகத்துக்க திரண்டு வந்தனர். அப்போது தங்கள் குழந்தைகளுக்கு பழங்குடியின (பளியர்) சான்றிதழ் கேட்டு பலமுறை விண்ணப்பித்தும் காரணமே இல்லாமல் அதிகாரிகள் புறக்கணிப்பு செய்கின்றனர். இதனால் குழந்தைகளுக்கு கிடைக்க வேண்டிய கல்வி சலுகைகள் எதுவும் கிடைப்பதில்லை. இதனால் குழந்தைகள் பலரும் கல்வி பயில முடியாமல் இடை நிற்றல் ஏற்படும் சூழல் நிலவுகிறது. எனவே எங்கள் குழந்தைகளுக்கு பழங்குடியின சான்றிதழ் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.
இதனை அடுத்து வருவாய்த் துறை அதிகாரிகள், போலீசார் அங்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத் தொடர்ந்து பொதுமக்கள் தங்கள் கோரிக்கை குறித்து சப்-கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். பின்னர் கோரிக்கை குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதைத் தொடர்ந்து பொதுமக்கள், தங்கள் பள்ளி சீரூடையில் வந்த குழந்தைகளுடன் அங்கு இருந்து கலைந்து சென்றனர். இதனால் சார் ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
What's Your Reaction?