கழிவுநீர் வாய்க்கால், வழிப்பாதை ஏற்படுத்தி தரக் வேண்டும் : தர்மபுரி வருவாய் கோட்ட ஆட்சியரிடம் மனு அளித்த கிராம மக்கள் !!!

தர்மபுரி மாவட்டம், எட்டிமரத்துப்பட்டி 6 வது வார்டு உறுப்பினர் சத்திநாராயணன் தலைமையிலான பொதுமக்கள் தர்மபுரி வருவாய் கோட்டாட்சியர் காயத்திரியிடம் மனு அளித்தனர்.
இதை அடுத்து கிராம மக்கள் கூறும்போது:
தர்மபுரி மாவட்டம், எட்டிமரத்துப்பட்டி 6 வது வார்டுக்கு உட்பட்ட மேல் மாரியம்மன் கோயில் வீதியில் 100 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றோம். இங்கு உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்லும் பாதையை அதே பகுதியை சேர்ந்த நில உரிமையாளர்கள் தங்களது பட்டா நிலம் வழியாக கழிவுநீர் செல்லக் கூடாது என கடந்த சில மாதங்களுக்கு முன்பு கழிவுநீர் கால்வாயை அடைத்து விட்டனர். இதனால் விடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல வழியின்றி ரோட்டில் தேங்கி நிற்கிறது. இதனால் இதில் கொசு உற்பத்தியாகி ஏராளமானவர்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இது தொடர்பாக அதிகாரிகளிடம் நாங்கள் புகார் செய்ததால் சிலர் எங்கள் தெருவில் யாரும் நடக்க முடியாதபடி சிமெண்டு கான்கிரீட்டை தோண்டி சேதப்படுத்தி விட்டனர். இதனால் மாரியம்மன் கோயில் தேர் திருவிழாவும் நடத்த முடியாத நிலை உள்ளது. எங்களுக்கு விட்டில் இருந்து வெளியே செல்ல வழிப்பாதையும், கழிவுநீர் செல்ல வாய்க்காலும் உடனடியாக ஏற்படுத்தி தர வேண்டும் என்று கிராம மக்கள் வருவாய் கோட்டாட்சியரிடம் மனு அளித்தனர்.
What's Your Reaction?