3000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பெருமாள் ஆலயம் : 300 மூட்டை அரிசியில் அறுசுவை விருந்து - ஜவ்வாது மலையில் ஒலித்த கோவிந்தா கோஷம் !!!
3000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பெருமாள் ஆலயம் : 300 மூட்டை அரிசியில் அறுசுவை விருந்து - ஜவ்வாது மலையில் ஒலித்த கோவிந்தா கோஷம் !!!
3000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பெருமாள் ஆலயம் : 300 மூட்டை அரிசியில் அறுசுவை விருந்து - ஜவ்வாது மலையில் ஒலித்த கோவிந்தா கோஷம் !!!
3000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பெருமாள் ஆலயத்தில், 300 மூட்டை அரிசியில் அறுசுவை விருந்து, ஜவ்வாது மலையில் ஒலித்த கோவிந்தா கோஷம்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி தாலுக்கா, ஆலங்காயம் அடுத்த ஜவ்வாது மலை பீம குளம் பகுதியில் அருள்மிகு ஸ்ரீ சென்றாய சுவாமி திருக்கோயில் அமைந்து உள்ளது. ஜவ்வாது மலைவாழ் மக்களின் குல தெய்வமாக விளங்கும் இந்த பெருமாள் ஆலயம் ஜவ்வாது மலை தொடரில் மூலிகை மனம் கமழ, திருப்பதி பெருமாள் கோவிலுக்கு இணையாக அமைந்து உள்ளது. மேலும் இந்த கோவிலுக்கு சென்றால் திருப்பதி கோவிலுக்கு சென்று வந்த பலன் கிட்டும் என்பது ஐதிகம்.
சிறப்பு வாய்ந்த இந்த திருக்கோவில் பஞ்சபாண்டவர் இங்கு தங்கி இருந்ததாகவும், அப்போது பீமன் இங்கு ஒரு குடிநீர் குளத்தை உருவாக்கியதால் இந்த இடம் பீம குளம் என்று அழைக்கபடுகிறது. மேலும் இங்கு உள்ள பெருமான் சுயம்புவாக தோன்றி மக்களுக்கு பல நூற்றாண்டுகளாக அருள் பாலித்து வருகிறார்.
சிறப்பு மிக்க இந்த திருத்தலத்தில் புரட்டாசி 4-ம் சனிக்கிழமை ஒட்டி கருட சேவை விழா நடந்து மலையப்ப சுவாமிகள், சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மலை வாழ் மக்கள் மற்றும் பொது மக்கள் இன்று திரளாக கூடி கோவிந்தா கோஷம் முழங்க பெருமானை வழிப்பட்டனர். கோவிந்தா கோஷம் ஜவ்வாது மலை முழுவதும் எதிரொளித்தது. பக்தர்கள் அனைவருக்கும் ஒரே நாளில் 300 மூட்டை அரிசியில் அறுசுவை விருந்து வழங்கப்பட்டது. ஆலய அர்ச்சகர் தியாகராஜன், விழா பொருப்பாளர் நந்தினி அதியமான், விழா குழு தலைவர் பாண்டியன், தலைவர் நடராஜன் ஆகியோர் விழாவை சிறப்பாக நடத்தினர். ஆலய ஆலோசகர் P.R. கோவிந்தராஜ் ஐயர் பக்தர்களுக்கு ஆசி வழங்கினார்.
What's Your Reaction?