யானை வழித் தடத்தை ஆக்கிரமித்து உள்ள தனியார் நிறுவனம் - சென்னை உயர் நீதிமன்றம் தலையிட விவசாயிகள் கோரிக்கை !!!
யானை வழித் தடத்தை ஆக்கிரமித்து உள்ள தனியார் நிறுவனம் - சென்னை உயர் நீதிமன்றம் தலையிட விவசாயிகள் கோரிக்கை !!!

யானை வழித் தடத்தை ஆக்கிரமித்து உள்ள தனியார் நிறுவனம் - சென்னை உயர் நீதிமன்றம் தலையிட விவசாயிகள் கோரிக்கை !!!
கோவை, மதுக்கரை அருகே மலைநகர் பகுதியில் யானை வழித் தடத்தை ஆக்கிரமித்து உள்ள தனியார் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் கந்தசாமி சென்னை உயர்நீதிமன்ற பதிவாளருக்கு அனுப்பி உள்ள மனுவில், கோவை மாவட்டம் மதுக்கரை வட்டம் எட்டிமடை மதுக்கரை ஆகிய வருவாய் கிராமங்களுக்கு பேரூர் வட்டம் சுண்டக்காமுத்தூர் வருவாய் கிராமமும் சந்திக்கின்ற மலை நகர் என்ற இடத்தில் ஒரு தனியார் நிறுவனத்தினர் காப்பு காட்டை ஒட்டி உள்ள நிலத்தில் யானை வழித்தட பாதையில் காளான் பண்ணை அமைப்பதாக உண்மைக்கு மாறாக வனத் துறையினரிடம் தடையில்லா சான்று பெற்று, வேறு தொழில் செய்ய நிரந்தர கட்டுமானம் கட்டி வருகின்றனர். அந்த இடத்தில் கட்டுமானம் கட்டி முடிக்க பட்டால் யானைகள் மற்றும் வனவிலங்குகள் மேற்கு தொடர்ச்சி மலையின் வடக்கு பகுதியில் இருந்து தென் பகுதிக்கு செல்லும் பாதை தடைப்படும். அதனால் வன விலங்குகள் கோவைப்புதூர் நகரத்துக்குள் புகுந்து சேதத்தை விளைவிக்கும். இந்தப் பணியை தடுத்து நிறுத்த கோரி கோவை மாவட்ட ஆட்சியருக்கு மனு அனுப்பி எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் இதைத் தொடர்ந்து தமிழக முதல்வருக்கு அனுப்பிய மனுவின் பேரில் எட்டிமடை பேரூராட்சி செயல் அலுவலர் அப்பகுதிக்கு வந்து ஆய்வு செய்தார். அரசால் அமைக்கப்பட்ட சிறப்பு குழுவினரும் இந்த புகாரின் மீது ஆய்வு செய்து உண்மை தன்மையை அரசுக்கு தெரிவித்து நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யவில்லை எனவே சென்னை உயர்நீதிமன்றம் இப்ப பிரச்சனையில் தாமாக முன்வந்து ஒரு சிறப்புக் குழுவை அனுப்பி இந்த புகார் உண்மையாக இருந்தால் தகுந்த நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் தெரிவித்து உள்ளார்.
What's Your Reaction?






