2 மணி நேரமாக 141 பயணிகளுடன் வானத்தில் வட்ட மடித்து பீதியை கிளப்பிய விமானம் : வெற்றிகரமாக தரையிறக்கம் !!!
2 மணி நேரமாக 141 பயணிகளுடன் வானத்தில் வட்ட மடித்து பீதியை கிளப்பிய விமானம் : வெற்றிகரமாக தரையிறக்கப்பட்ட விமானம் !!!
2 மணி நேரமாக 141 பயணிகளுடன் வானத்தில் வட்ட மடித்து பீதியை கிளப்பிய விமானம் : வெற்றிகரமாக தரையிறக்கப்பட்ட விமானம் !!!
தொழில் நுட்பக் கோளாறால் தரை இறங்க முடியாமல் வானத்தில் வட்டமடித்த விமானம், தயார் நிலையில் வைக்கப்பட்ட ஆம்புலன்ஸ்கள், தீயணைப்பு வீரர்கள்; திருச்சி விமான நிலையத்தில் ஏற்பட்ட பரபரப்பு.
தமிழகத்தில், சென்னைக்கு அடுத்தப் படியாகயும், மெட்ரோ அல்லாத விமான நிலையங்களில் முதலிடத்திலும் உள்ள திருச்சி சர்வதேச விமான நிலையம் 702 ஏக்கர் பரப்பளவில் செயல்பட்டு வருகிறது. இந்த விமான நிலையத்தில் நூற்றுக் கணக்கான விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. பல்லாயிரக் கணக்கான பொதுமக்கள் தினமும் இந்த விமான நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று மாலை திருச்சி விமான நிலையத்தில் இருந்து மாலை 5.40 மணிக்கு சார்ஜாவுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தின் சக்கரங்கள் உள்ளே செல்ல முடியாததால் விமானத்தை மீண்டும் திருச்சியிலேயே தரையிறக்க விமானிகள் முயற்சி செய்தார். இந்த விமானத்தில் 141 பயணிகள் சார்ஜா புறப்பட்டு சென்றனர். விமானத்தில் ஏற்பட்ட தொழில் நுட்ப கோளாறு காரணமாக சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக விமானம் வானத்தில் வட்ட மடித்துக் கொண்டு இருந்தது. விமானத்தின் எரிபொருள் குறைந்த பிறகு தான் விமானத்தை கீழே இறக்க வேண்டும் என்ற உத்தரவுக்கு ஏற்ப விமானிகள் வானத்தில் வட்ட மடித்துக் கொண்டு இருந்தனர்.
பயணிகளோ பரிதவிப்புடன் விமானத்தில் என்ன நடக்கும் ? என தெரியாமல் தவிப்புடன் . பீதி ஏற்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பத்துக்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு செய்யப்பட்டிருந்தது. மேலும், அரசுத் துறை, விமானத் துறை அதிகாரிகள் திருச்சி விமான நிலையத்தில் முகமிட்டனர். பாதுகாப்பு படையினரும் தீயணைப்புத் துறை வீரர்களும் தயார் நிலையில் இருக்கும் சூழலால் பயணிகளை ஏற்றி விட வந்த உறவினர்களும் அச்சத்தில் விமான நிலையத்தில் காத்துக் கொண்டு இருந்தனர். இதனால் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்பட்டது.
இந்தநிலையில், விமானம் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது.
What's Your Reaction?