ஒரே தண்டவாளத்தில் 2 ரயில்கள் மோதி கோர விபத்து !!!

ஒரே தண்டவாளத்தில் 2 ரயில்கள் மோதி கோர விபத்து !!!

Nov 30, -0001 - 00:00
Oct 12, 2024 - 21:59
 0  6
ஒரே தண்டவாளத்தில் 2 ரயில்கள் மோதி கோர விபத்து !!!
ஒரே தண்டவாளத்தில் 2 ரயில்கள் மோதி கோர விபத்து !!!
ஒரே தண்டவாளத்தில் 2 ரயில்கள் மோதி கோர விபத்து !!!

ஒரே தண்டவாளத்தில் 2 ரயில்கள் மோதி கோர விபத்து !!!

சென்னை அருகே திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை ரயில் நிலையம் அருகே மைசூரு தர்பாங்கா பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில், சரக்கு ரயில் மீது மோதி விபத்து. இதில் 2 ஏ.சி பெட்டிகள் தீப்பிடித்து எரிந்த நிலையில் மேலும் பல பெட்டிகள் தடம் புரண்டு உள்ளது.

இந்நிலையில் தான் இந்த பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் இன்று இரவு திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை ரயில் நிலையம் அருகே சென்று கொண்டு இருந்தது. அப்போது ரயில் தண்டவாளத்தில் சரக்கு ரயில் ஒன்று நின்றது. சரக்கு ரயில் நின்ற தண்டவாளத்தில் பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் வந்தது.

அதாவது மெயின் லைனில் சென்று கொண்டு இருந்த மைசூர் - தர்பங்கா பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் லூப் லைனில் சென்று சரக்கு ரயில் மீது மோதி உள்ளது. இதில் பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டிகள் தடம் புரண்டன. பெட்டிகள் அருகே உள்ள தண்டவாளம் மற்றும் அதனை சுற்றிய இடங்களில் தடம்புரண்டு தலைக்குப்புற கவிழ்ந்தன. 2 ஏசி பெட்டிகள் தீப்பிடித்து எரிந்தன.

இதையடுத்து பயணிகள் அலறியடித்தபடி ரயில் பெட்டியில் இருந்து வெளியே ஓடி வந்தனர். மேலும் அந்த வழியாக சென்ற பொதுமக்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். தகவல் அறிந்தவுடன் தீயணைப்பு வீரர்கள், போலீசார், ரயில்வே அதிகாரிகள், ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் ரயில் பெட்டியில் சிக்கிய பயணிகளை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.

முதற்கட்ட தகவலின் படி ரயில் பயணிகள் சிலர் காயமடைந்து உள்ளதாக கூறப்படுகிறது. மற்றபடி உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று சொல்லப்படுகிறது. தற்போது ரயில் விபத்துக்கான காரணம் என்ன? என்பது தெரியவில்லை. ஆனாலும் சிக்னல் கோளாறு காரணமாக ரயில் விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுபற்றி ரயில்வே அதிகாரிகள் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

 பெரும்பாலான பயணிகள் மீட்கப்பட்டு, விடுவிக்கப்பட்டு உள்ளனர் அல்லது படுகாயம் அடைந்தவர்களுக்கு தேவைக்கேற்ப மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டு உள்ளனர். என ரயில்வே துறை அதிகாரிகள் தரப்பில் இருந்து கூறப்படுகிறது.

 மேலும் பயணிகளை ஏற்றிச் செல்ல மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டும் வருகின்றன.

சென்னை சதன் ரயில்வே பிரிவில் அவசர உதவி எண்கள் வெளியிட்டு உள்ளனர்

04425354151,

04424354995,

ஹெல்ப்லைன் எண்-044-25330952 மற்றும் 044-25330953 Comm ctrl இல் வழங்கப்பட்டுள்ளது.

MAS நிலையத்தில் இரண்டு ஹெல்ப்லைன் எண்-044-25354995 (பிஎஸ்என்எல்) ஃபோன்... 22277 வழங்கப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow