கல் குவாரி, அறவை தொழிற் சாலைகள் : 10 ஆண்டுகளாக சாலையை பயன்படுத்த முடியாமல் கிராம மக்கள் வேதனை !!!

கல் குவாரி, அறவை தொழிற் சாலைகள் : 10 ஆண்டுகளாக சாலையை பயன்படுத்த முடியாமல் கிராம மக்கள் வேதனை !!!

Oct 20, 2024 - 22:23
 0  11
கல் குவாரி, அறவை  தொழிற் சாலைகள் : 10 ஆண்டுகளாக சாலையை பயன்படுத்த முடியாமல் கிராம மக்கள் வேதனை !!!
கல் குவாரி, அறவை தொழிற் சாலைகள் : 10 ஆண்டுகளாக சாலையை பயன்படுத்த முடியாமல் கிராம மக்கள் வேதனை !!!

 கல் குவாரி, அறவை தொழிற் சாலைகள் : 10 ஆண்டுகளாக சாலையை பயன்படுத்த முடியாமல் கிராம மக்கள் வேதனை !!!

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மதூர், சித்தாலப்பாக்கம், அருங்குன்றம், பழவேரி, சிறுதாமூர், குண்ணவாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 50 க்கும் மேற்பட்ட கல்குவாரி மற்றும் கல் அறவை தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது.

அப்பகுதியில் அமைக்கப்பட்டு உள்ள பெரும்பாலான கல்குவாரி மற்றும் கல் அறவை தொழிற் சாலைகள் கிராம குடியிருப்புகள் அருகாமையிலும், நெடுஞ்சாலை ஓரங்களிலும் உள்ளது. மேலும் அங்கே பல கல்குவாரிகள் அரசு அனுமதித்த அளவை மீறி பள்ளம் தோண்டப்படுவதாகவும், கல்குவாரி மற்றும் கல் அறவை தொழிற் சாலைகளில் வேலை செய்பவர்கள் முறையான பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் பணியாற்றுவதால் அவ்வபோது ஏற்படும் விபத்துகளில் பலர் உயிரிழந்து வருவது தொடர் கதையாக உள்ளதாக கூறப்படுகிறது. அதே போல், கல்குவாரிகளில் பயன்படுத்தப்படும் வெடி பொருட்கள் குடியிருப்பு பகுதிகளில் அதிர்வை ஏற்படுத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. மேலும், அந்த கல்குவாரி மற்றும் கல் அறவை தொழிற் சாலைகளில் இருந்து 300 க்கும் மேற்பட்ட கனரக லாரிகளில் ஜல்லிக் கற்கள், எம்சாண்ட், பெரிய கற்கள் உள்ளிட்டவைகளை ஏற்றிக் கொண்டு சென்னை, காஞ்சிபுரம் திருவள்ளூர் உள்ளிட்ட தமிழகத்தின் பிற மாவட்ட பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது. அப்படி செல்லும் கனரக வாகனங்கள் மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலை பின்பற்றாமல் அதிக பாரம் ஏற்றி கொண்டும், தார் பாய் போட்டு மூடாமலும் ஓட்டுநர்கள் அதிவேகமாக கொண்டு செல்கின்றனர். அதனால் சாலைகள் சேதம் அடைவது மட்டுமில்லாமல் கனரக வாகனங்களில் இருந்து ஜல்லி கற்கள், எம்சாண்ட் மணல்கள் கீழே கொட்டுவதால் அவ்வழியாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்களின் கண்கள் பாதிக்கப்பட்டு வாகனங்களை தொடர்ந்து இயக்க முடியாமல் கடும் சிரமம் படுகின்றனர். அதே போல், கல்குவாரி வாகனங்களில் இருந்து வெளியேறும் மண் தூசிகளால் பள்ளி மாணவர்கள் முதல் குடியிருப்பு வாசிகள் வரை கடும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் மண் தூசியால் விவசாயம் மற்றும் நீர் நிலைகள் பாதிக்கப்படுவதாகவும், மரம் செடி கொடிகள் மாசடைந்து வரும் நிலையில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் என்ற ஒன்று செயல்படுகிறதா என்று பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

இதுகுறித்து கிராமவாசிகள் அரசு அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தாலும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டுகின்றனர். கல்குவாரி கனரக வாகனங்கள் திருமுக்கூடல் - பழையசீவரம் பாலாறு மேம்பாலத்தில் அதிவேகமாக செல்வதால் பாலத்தின் நடுப்பகுதியில் அதிரலைகள் தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது. எனவே மாவட்ட ஆட்சியர் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், நெடுஞ்சாலை துறையினர் உள்ளிட்டோர் உத்திரமேரூர் பகுதியில் செயல்படும் கல்குவாரி மற்றும் கல் அறவை தொழிற் சாலைகளை ஆய்வு செய்து பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கவும், திருமுக்கூடல் - பழையசீவரம் பாலாறு மேம்பாலத்தின் உறுதி தன்மையை ஆய்வு செய்யவும், கல்குவாரி வாகனங்களால் சேதமடைந்த நெடுஞ்சாலைகளை சீரமைக்கவும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow