விலை இல்லா மிதிவண்டி : கோவில்பட்டி அரசு மகளிர் பள்ளியில் வழங்கினர் !!!
விலை இல்லா மிதிவண்டி : கோவில்பட்டி அரசு மகளிர் பள்ளியில் வழங்கினர் !!!

விலை இல்லா மிதிவண்டி : கோவில்பட்டி அரசு மகளிர் பள்ளியில் வழங்கினர் !!!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அரசு மகளிர் தகை சால் மேல்நிலைப் பள்ளியில் இன்று விலை இல்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி மாவட்ட கல்வி அலுவலர் பிரபாகரன் தலைமை வகித்தார். பள்ளியின் உதவி தலைமை ஆசிரியை ஜோசப்பின் உஷா முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியை ஜெயலதா அனைவரையும் வரவேற்று பேசினார். இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கோவில்பட்டி நகர் மன்ற தலைவர் கருணாநிதி கலந்து கொண்டு பதினோராம் வகுப்பு பயிலும் 490 குழந்தைகளுக்கு விலை இல்லா இலவச மிதிவண்டியை வழங்கினார். உடன் கோவில்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட வார்டு உறுப்பினர்கள் சித்ரா தேவி, உமா மகேஸ்வரி பள்ளித் துணை ஆய்வாளர் ரமேஷ் மற்றும் பள்ளி ஆசிரியர்களும் கலந்து கொண்டனர். சுப்பிரமணியன் ஆசிரியர் நன்றி கூற நிகழ்வு இனிதே நிறைவுற்றது.
What's Your Reaction?






