தி.மு.க கட்சி வழக்கறிஞர் போதையில் ரகளை : தட்டிக் கேட்ட வியாபாரிகளுக்கு கொலை மிரட்டல் - நடவடிக்கை எடுக்க புகார் !!!

தி.மு.க கட்சி வழக்கறிஞர் போதையில் ரகளை : தட்டிக் கேட்ட வியாபாரிகளுக்கு கொலை மிரட்டல் - நடவடிக்கை எடுக்க புகார் !!!

Oct 20, 2024 - 22:33
 0  14
தி.மு.க கட்சி வழக்கறிஞர் போதையில்  ரகளை : தட்டிக் கேட்ட வியாபாரிகளுக்கு கொலை மிரட்டல் - நடவடிக்கை எடுக்க புகார் !!!
தி.மு.க கட்சி வழக்கறிஞர் போதையில் ரகளை : தட்டிக் கேட்ட வியாபாரிகளுக்கு கொலை மிரட்டல் - நடவடிக்கை எடுக்க புகார் !!!

 தி.மு.க கட்சி வழக்கறிஞர் போதையில் ரகளை : தட்டிக் கேட்ட வியாபாரிகளுக்கு கொலை மிரட்டல் - நடவடிக்கை எடுக்க சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு !!!

சென்னை, வண்ணாரப்பேட்டை மணிகண்டன் முதலி 6 வது தெருவில் வசிப்பவர் காணிக்கைநாதன். இவர் தி.மு.க வடக்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு அமைப்பாளராக இருந்து வருகிறார். இந்நிலையில் வண்ணாரப்பேட்டையில் துணிக்கடை நிறைந்த இந்த பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வாடிக்கையாளர் என  

ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர்  

துணிகளை வாங்க வருகின்றனர். மேலும் அப்பகுதியில் அதிகமான கூட்ட நெரிசல் அதிகமாக காணப்படுவதால், போலீசார் சார்பில்

கனரக வாகனங்கள் மற்றும் கார், ஆட்டோ, உள்ளிட்டவை வாகனங்களுக்கு செல்ல தடை விதித்து பேரிகார்டு அமைக்கப்பட்டது. இதனை அடுத்து போலீசாரால் அமைக்கப்பட்ட பேரி கார்டை தி.மு.க வழக்கறிஞர் அமைப்பாளரான காணிக்கைநாதன் என்பவர் போதையில் 

ரகளை ஈடுபட்டதும், அல்லாமல் பேரிகாடை அகற்றி உள்ளார். இதனை அடுத்து அங்குள்ள வியாபாரிகளின் சங்க நிர்வாகிகள், இதுபற்றி தட்டிக் கேட்ட போது வியாபாரிகளை தி.மு.க வழக்கறிஞர் அவதூறாக பேசியும் தாக்கியும், கொலை மிரட்டலும் விட்டுச் சென்ற போது சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வண்ணாரப்பேட்டை காவல் ஆய்வாளர் ராஜாராம் தலைமையில் சமாதானம் பேசுகையில்  

வியாபாரிகளுக்கு கொலை மிரட்டல் விட்டுச் சென்ற தி.மு.க வழக்கறிஞர் காணிக்கை நாதனை உடனடியாக கைது செய்ய வேண்டும் என துணிகடை வியாபாரிகள் ஒன்றிணைந்து  

கோஷங்களை எழுப்பியவாறு சாலை மறியலில் ஈடுபட்டனர். மருத்துவமனைக்கு செல்லக் கூடிய ஆம்புலன்ஸ் உட்பட ஏராளமான வாகனங்கள் ஆங்காங்கே நின்றதால் போக்குவரத்து நெரிசலில் சம்பித்தது. பின்னர் உடனடியாக வண்ணாரப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போக்குவரத்து நெரிசலை சரி செய்தும் வியாபாரிகளிடம் சமரசம் பேசி காவல் நிலையம் அழைத்து சென்று வழக்கறிஞர் காணிக்கைநாதன் மீது புகாரை பெற்று கொண்டனர். தற்போது வண்ணாரப்பேட்டை 

போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow