புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பு : பெண்கள் சாலை மறியல் - உடனடியாக அளவீடு செய்து கொடுத்த அதிகாரிகள் !!!

புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பு : பெண்கள் சாலை மறியல் - உடனடியாக அளவீடு செய்து கொடுத்த அதிகாரிகள் !!!

Oct 18, 2024 - 20:31
 0  12

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு ஒன்றித்திற்கு உட்பட்ட செக்கொடி ஊராட்சியில் அரசு புறம்போக்கு நிலங்கள், மேய்ச்சல் தரை உள்ளிட்ட பல ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளது. இந்த நிலையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தில் பணி செய்யும் பணியாளர்களுக்கு, கால்வாய், குளம் போன்ற பணிகளை செய்வதற்கு இடம் இல்லாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் ஊராட்சி மன்ற தலைவர் மூலமாக மாவட்ட ஆட்சித் தலைவருக்கு, ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரியும், ஆக்கிரமிப்பில் உள்ள அரசு புறம்போக்கு நிலங்கள், மேய்ச்சல் தரை போன்றவற்றை தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தில் குளங்கள் வெட்டுவதற்கு ஒதுக்க வேண்டும் என சர்வே நம்பருடன் புகார் அளித்து இருந்தனர். இந்த நிலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆக்கிரமகப்பில் உள்ள நிலங்களை மீட்டு, பணி செய்வதற்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென உத்தரவிட்டு இருந்தார். 

இதனைத் தொடர்ந்து ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் மூலம் மேச்சல் தரை ஆக்கிரமிப்பு செய்த பழனி என்பவருக்கு எச்சரிக்கை விடுத்து உள்ளனர். அப்பொழுது சோளம் மகசூல் வரும் சூழல் இருப்பதால் ஒரு மாத காலத்திற்கு அறுவடை செய்து விட்டு இடத்தை ஒப்படைப்பதாக தெரிவித்து உள்ளார். ஆனால் ஒரு மாத காலத்தில் சோளம் அறுவடை செய்யவில்லை. இது மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தில் பணி செய்யும் பணியாளர்கள் மூலம் சோளம் பயிர்களை அறுவடை செய்து உள்ளனர். அப்பொழுது பழனி மனைவி பணியாளர்களை தகாத வார்த்தையில் பேசி உள்ளார். 

இதனால் பணியாளர்களுக்கும் பழனி மனைவிக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. இதை தொடர்ந்து இன்று பணி செய்வதற்கு ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டு தர வலியுறுத்தி, தருமபுரி சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து பாப்பாரப்பட்டி காவல் துறையினர், பாலக்கோடு வட்டாட்சியர் ரஜினி உள்ளிட்டோர் பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்பொழுது ஆக்கிரமில் உள்ள அரசு நிலத்தை மீட்டு வேலை செய்வதற்கு இடத்தை ஒதுக்கி தர வேண்டும் என வலியுறுத்தினார். இதனை தொடர்ந்து அதிகாரிகள் நேரடியாக சென்று ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாக கூறப்பட்ட நிலத்தில் அளவீடு செய்து பணியாளர்கள் வேலை செய்வதற்கு, இடத்தை ஒதுக்கி கொடுத்தனர். மேலும் அரசுக்கு சொந்தமான நிலத்தை அளவீடு செய்து, எல்லை கற்கள் அமைத்தனர். மேலும் தங்களுக்கு சொந்தமான இடத்தினை எப்பொழுது வேண்டுமானாலும் எடுத்துக் கொள்வோம் என எச்சரிக்கை விடுத்து உள்ளனர். மேலும் அரசு நிலத்தை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டு தர கோரி 200 க்கும் மேற்பட்ட பெண்கள் சாலை மறியல் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow