கோவை நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு : காவல்துறை ஜிப் கண்ணாடியை உடைத்து போதை ஆசாமி ரகளை
கோவை நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு : காவல்துறை ஜிப் கண்ணாடியை உடைத்து போதை ஆசாமி ரகளை
கோவை நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு : காவல்துறை ஜிப் கண்ணாடியை உடைத்து போதை ஆசாமி ரகளை !!!
கோவை, சிங்காநல்லூர் காவல் ஆய்வாளர் மசூதா பேகம், கோவை நீதிமன்றத்திற்கு வழக்கு தொடர்பாக காவல்துறை ஜீப்பில் சென்று இருந்தார். அப்பொழுது நீதிமன்ற வளாகத்தில் குடிபோதையில் ஒரு வாலிபர் சுற்றித் திரிந்தார். ஏற்கனவே சிங்காநல்லூரில் வீடு புகுந்து 12 பவுன் நகை திருட்டில் தேடப்படும் ஆசாமி போல் அந்த வாலிபர் இருந்ததார் அவரை பிடித்து வாகனத்தின் டிரைவரின் பாதுகாப்பில் விட்டு, விட்டு நீதிமன்றத்திற்கு ஆய்வாளர் மசூதா பேகம் சென்றார். ஆனால் வாகனத்தில் ஏறி அமர்ந்து இருந்த அந்த வாலிபர் திடீரென ரகளையில் ஈடுபட்டார். தன்னை விடுவிக்குமாறு கூறி ஓட்டுனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் வாகனத்தின் பின்பக்க கண்ணாடியை கையால் குத்தி உடைத்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அங்கு இருந்த காவலர்கள் விரைந்து வந்து அந்த வாலிபரை மடக்கிப் பிடித்தனர். பின்னர் சிங்காநல்லூர் காவல் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் வாகனத்தின் கண்ணாடி உடைத்த வாலிபர் சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த சக்தி காந்தி என்பது தெரிய வந்தது. அத்துடன் அவர் மீது சிங்காநல்லூர் உட்பட பல்வேறு காவல் நிலையங்களில் 13 திருட்டு வழக்குகள் உள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சக்தி காந்தி கைது செய்யப்பட்டார். அவர் மீது நீதிமன்ற வளாகத்தில் காவல்துறை வாகன கண்ணாடியை உடைத்து, கொலை மிரட்டல் விடுத்ததாக ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.
What's Your Reaction?