வடையில் பூரான் : சாப்பிட்ட குழந்தை மருத்துவமனையில் அனுமதி - தட்டி கேட்ட பெண்களை தரக்குறைவாக பேசிய கடை உரிமையாளர் !!!

வடையில் பூரான் : சாப்பிட்ட குழந்தை மருத்துவமனையில் அனுமதி - தட்டி கேட்ட பெண்களை தரக்குறைவாக பேசிய கடை உரிமையாளர் !!!

Oct 16, 2024 - 15:05
 0  29

திண்டுக்கல் என்.ஜி.ஓ காலனி பகுதியைச் சேர்ந்தவர் பியூலா இவர் தனது உறவினர் அஸ்வதி மற்றும் தனது மகனை அழைத்துக் கொண்டு N.G.O காலனி மெயின் ரோட்டில் உள்ள ஜம்ஜம் தேநீர் கடையில் வடை கேட்டு உள்ளனர். கடையில் பணி செய்பவர்கள் வடையில் குருமா ஊற்றி கொடுத்து உள்ளனர். தனது மகனுக்கு வாங்கிய வடையை ஊட்டிய போது அதில் பூரான் இருந்ததைப் பார்த்த பியூல மற்றும் அஸ்வதி இருவரும் அதிர்ச்சி அடைந்து கடை உரிமையாளரிடம் இது பற்றி கேட்டு உள்ளனர். அப்போது கடை உரிமையாளர் இவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தரக்குறைவாக பேசி உள்ளார். உங்கள் வீட்டில் பூரான் இல்லையா ? இதனால் பியூலா தனது மகனுக்கு எதுவும் ஆகி விடக் கூடாது என பயத்தில் திண்டுக்கல் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக மகனை சேர்த்து உள்ளார் மேலும் திண்டுக்கல் உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் தகவல் கூறி உள்ளார்.

இதை அடுத்து திண்டுக்கல் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி செல்வம் தலைமையிலான அதிகாரிகள் குழு ஜம்ஜம் பேக்கரிக்கு நேரில் சென்று வடைக்கு தயார் செய்யப்பட்ட மாவு மற்றும் அதன் குருமா உள்ளிட்டவைகளை ஆய்வுக்காக எடுத்துக் கொண்டு மிதி உள்ளதை அங்கு இருந்து அப்புறப்படுத்தினர்.

திண்டுக்கல் நகர் மற்றும் மாவட்டம் முழுவதும் உள்ள கடைகளில் பொதுமக்கள் சாப்பிடும் உணவுகள் தரமாக உள்ளதா ? என அவ்வப் போது உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் அப்படி ஆய்வு செய்தால் மட்டுமே உணவு தரமான உணவாக பொதுமக்களுக்கு கிடைக்கும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தொடர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow