ஓட, ஓட விரட்டி இளைஞரை வெட்டிய இருவர் - காவல்துறை கைது செய்து விசாரணை
ஓட, ஓட விரட்டி இளைஞரை வெட்டிய இருவர் - காவல்துறை கைது செய்து விசாரணை
தம்பி கொலைக்கு பழிக்குப் , பழி தீர்க்க அண்ணன் கொலை முயற்சி : ஓட, ஓட விரட்டி இளைஞரை வெட்டிய இருவர் - காவல்துறை கைது செய்து விசாரணை !!!
கோவை, தொண்டாமுத்தூர் அருகே குரும்பபாளையம் பகுதியைச் சேர்ந்த ஜெகன்ராஜ் இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மதன்ராஜ் என்பவருக்கும் பணம், கொடுக்கல் வாங்கலில் தகராறு இருந்து வந்து உள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டு ஜெகன் ராஜை, மதன்ராஜ் கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் ஜெகன்ராஜின் அண்ணன் சித்திரை குமார் மற்றும் மச்சான் முருகன் ஆகிய இருவரும் மதன்ராஜை ஜெகன்ராஜ் கொலையின் முன்விரோதம் காரணமாக கொலை செய்ய திட்டமிட்டு இருந்தனர். இதைத் தொடர்ந்து மதன்ராஜ் கொலை வழக்கில் இருந்து ஜாமினில் வெளியே வந்தார். இன்று மாலை குரும்பபாளையம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டு இருந்த மதன்ராஜ் வழிமறித்த சித்திரை குமார் மற்றும் முருகன் மறைத்து வைத்து இருந்த கத்தியால் கடுமையாக தாக்கினர். இதில் கை, தலை, முகம் போன்ற பகுதிகளில் பலத்த வெட்டு காயம் ஏற்பட்டது. மதன்ராஜன் அலறல் சத்தம் கேட்டு அங்கு இருந்த பொதுமக்கள் கூடியதால் அங்கு இருந்து சித்திரைகுமார் மற்றும் முருகன் ஆகிய இருவரும் தப்பி ஓடினர். இது குறித்து தொண்டாமுத்தூர் காவல் துறையினருக்கு அப்பகுதி பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர் மதன்ராஜை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் தப்பி ஓடிய ஜெகன்ராஜின் அண்ணன் சித்திரை குமார் மற்றும் முருகன் ஆகிய இருவரையும் தொண்டாமுத்தூர் காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலைக்கு பழிக்கு, பழி வாங்க இளைஞரை ஓட, ஓட வெட்டிய சம்பவம் கோவையில் அதிர்ச்சியையும், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
What's Your Reaction?