எடை குறைவாக இருக்கிறது நுகர்வோர் நீதிமன்றத்தில் கேஸ் சிலிண்டர் உடன் வந்தவரால் பரபரப்பு
எடை குறைவாக இருக்கிறது நுகர்வோர் நீதிமன்றத்தில் கேஸ் சிலிண்டர் உடன் வந்தவரால் பரபரப்பு
எடை குறைவாக இருக்கிறது நுகர்வோர் நீதிமன்றத்தில் கேஸ் சிலிண்டர் உடன் வந்தவரால் பரபரப்பு !!!
கோவை ஆர்.எஸ் புரம் பகுதியைச் சேர்ந்தவர் நிர்மல். அந்தப் பகுதியில் கோழி கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்திற்கு சமையல் கேஸ் சிலிண்டர் மற்றும் எடை இயந்திரத்துடன் வந்தார். அந்த நேரத்தில் கலெக்டர் அலுவலகத்தில் பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்றார் அத்துடன் அந்த கேஸ் சிலிண்டர் உடன் நிர்மல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நிர்மல் கடந்த 2023 ஆம் ஆண்டு தனது வீட்டிற்கு சமையல் கேஸ் சிலிண்டர் வாங்கி உள்ளார். பொதுவாக வீட்டுக்கு பயன்படுத்தும் ஒரு கேஸ் சிலிண்டரின் மொத்த எடை 30 கிலோ 100 கிராம் இருக்க வேண்டும், ஆனால் அவருக்கு வழங்கப்பட்ட கேஸ் சிலிண்டர் எடை 27 கிலோ 700 கிராம் தான் இருந்தது. இதற்கு முன் இதே போன்று அவரது வீட்டிற்கு இரண்டு முறை எடை குறைவாகவே காஸ் சிலிண்டர் விநியோகமானது. இது குறித்து அவருக்கு சிலிண்டர் விநியோகம் செய்யும் விநியோகஸ்தரை தொடர்பு கொண்டு கேட்டார். அவர் சரியான பதில் அளிக்கவில்லை, இதனால் அவர் இதுகுறித்து கடந்த 2023 ஆம் ஆண்டு மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் மனு அளித்தார். அந்த மனு மீதான விசாரணை வந்தது, எனவே எடை குறைவாக சமையல் கேஸ் சிலிண்டரை நீதிமன்றத்திற்கு ஆதாரத்திற்காக கொண்டு வந்தார். அந்த சிலிண்டர் ஒரு ஆண்டுக்கு மேலாக சீல் உடைக்காமல் பாதுகாப்பாக வைத்து இருந்தார். எனவே விரைவில் நல்ல தீர்வு கிடைக்க வேண்டும் என கூறினார்.
What's Your Reaction?