முத்தாலம்மன் கோவில் தேரோட்டம் : வத்திராயிருப்பில் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர் !!!
முத்தாலம்மன் கோவில் தேரோட்டம் : வத்திராயிருப்பில் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர் !!!
முத்தாலம்மன் கோவில் தேரோட்டம் : வத்திராயிருப்பில் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர் !!!
ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு பகுதியில் பிரசித்தி பெற்ற முத்தாலம்மன் கோவில் தேரோட்டம் வெகு விமர்சியாக நடந்தது பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
வத்திராயிருப்பு பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்றது முத்தாலம்மன் திருக்கோவில் இங்கு எழுந்தருளி இருக்கும் முத்தாலம்மன் மழைக்கு அதிபதியாக இப்பகுதி மக்களால் வழங்கப்படுகிறது.
ஒவ்வொரு வருடமும் புரட்டாசி மாதம் அம்மனுக்கு ஒரு வார காலம் விழா எடுத்து வழிபடுவது வழக்கம். விழாவின் இறுதி நாளில் அம்மன் தேரோட்டம் நடைபெறும். இதில் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் அப்பகுதி கிராமங்களை சேர்ந்த மக்கள் ஜாதி, மத பேதமின்றி ஒன்று இணைந்து கலந்து கொள்வார்கள். பல்வேறு பாரம்பரிய சிறப்புகளைக் கொண்ட இத்திருவிழா கடந்த வாரம் கோவில் மைதானத்தில் கலை விழா உடன் துவங்கியது. இந்து, கிறிஸ்தவ, முஸ்லிம் மத தலைவர்கள் கலந்து கொண்டு விழாவை துவக்கி வைத்தனர். ஒவ்வொரு நாளும் இயல், இசை, நாடகம் என பல்வேறு கலை நிகழ்ச்சிகள், முத்தமிழ் விழாக்கள் நடந்தது.
இறுதி நாளான நேற்று தேரோட்டம் வெகு விமர்சையாக நடந்தது. அம்மன் தேரில் எழுந்தருளும் நிகழ்ச்சி அதிகாலையில் துவங்கியது பக்தர்கள் அம்மனை கரகோஷம் முழங்க தேரில் அமர்த்தி வைத்தனர். பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று நண்பகல் 3.30 மணி அளவில் வந்து சேர்ந்தது. பக்தர்கள் மேளதாளம் வழங்க எதிர்சேவை செய்து அம்மனை வரவேற்று கோவிலில் எழுந்தருளச் செய்தனர். அங்கு அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும் வழிபாடும் நடந்தது. பக்தர்கள் உருவச் சிலைகளை காணிக்கையாக செலுத்தியும், மஞ்சள் நீர் ஊற்றியும் நேர்த்திக் கடன் செலுத்தி வழிபட்டனர். மாலையில் பக்தர்களின் மஞ்சள் நீராட்டு வைபவம் நடந்தது. அதனைத் தொடர்ந்து இரவு மாவிளக்கு வழிபாடும் அம்மன் பிரியாவிடை நிகழ்ச்சியும் நடந்தது. இதில் அம்மன் பக்தர்களுக்கு பிரியா விடை கொடுத்து புறப்பட்டார் கோவிலை அவர் கோவிலில் இருந்து அம்மன் கிளம்பி வெளியே வந்தவுடன் பக்தர்கள், மேளதாளம் முழங்க பூக்களை தூவியும் குலவையிட்டு வழிபாடு செய்தும் கண்ணீர் மல்க வழி அனுப்பி வைத்தனர். அதனைத் தொடர்ந்து அம்மனை ஆற்று நீரில் கரைப்பதற்காக பக்தர்கள் ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். அறநிலையத் துறையினர் பக்தர்கள் ஊர் பொதுமக்கள் திருவிழா ஏற்பாடுகளை செய்தனர்.
What's Your Reaction?