கோவை கொட்டித் தீர்த்த கன மழை : தண்ணீரில் மூழ்கிய தலைப்பாலம் - ஓடையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு இரண்டு கார்கள் அடித்துச் செல்லப்பட்டது !!!

கோவை கொட்டித் தீர்த்த கன மழை : தண்ணீரில் மூழ்கிய தலைப்பாலம் - ஓடையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு இரண்டு கார்கள் அடித்துச் செல்லப்பட்டது !!!

Oct 23, 2024 - 19:55
 0  3

கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் நேற்று மாலையில் மழை பெய்ய தொடங்கியது. குறிப்பாக பெரியநாயக்கன் பாளையம், காரமடை, மேட்டுப்பாளையம் மற்றும் அதைச் சுற்றி உள்ள பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. குறிப்பாக பாலமலை பகுதியில் மழை கொட்டித் தீர்த்தது.

இந்த மலையில் இருந்து உற்பத்தியாகி, பெரியநாயக்கன்பா ளையம், மத்தம்பாளையம், கோட்டை பிரிவு வழியாக செல்லும் ஏழெருமைப் பள்ளம் ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மத்தம் பாளையத்தில் இருந்து ஒன்னிபாளையம் வழியாக செல்லும் இந்த சாலையில் ஓடையின் குறுக்கே தரைப்பாலம் உள்ளது.

மழை காரணமாக தரைப்பாலத்தில் 4 அடிக்கும் மேல் தண்ணீர் சென்றது. அப்போது மின்தடை ஏற்பட்டதால் இருள் சூழ்ந்து இருந்தது. இதனால் ஓடை தரைப் பாலத்தில் தண்ணீர் அதிகமாக வருவது தெரியாமல் அந்த வழியாக 2 கார்கள் கடக்க முயன்றன. இதில் அந்த 2 காரும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. இதனால் கார்களுக்குள் இருந்த 4 பேரும் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் சுதாரித்துக் கொண்டு காரில் இருந்து கீழே இறங்கியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். அந்த 2 கார்களையும் தண்ணீர் அடித்துச் சென்றது.

இதை அறிந்த பெரியநாயக்கன் பாளையம் தீயணைப்பு படை வீரர்கள் மற்றும் போலீசார் விரைந்து சென்றனர். ஆனால் அங்கு இருள் சூழ்ந்து இருந்ததால் கார்களை உடனடியாக மீட்க முடியவில்லை. அதுபோன்று காரமடை, மேட்டுப்பாளையம் பகுதியில் கனமழை கொட்டித் தீர்த்தது. இந்த மழையால் அங்கு உள்ள அரசு போக்குவரத்துக் கழக பணிமனை சுற்றுச் சுவர் இடிந்து விழுந்தது.

அதுபோன்று கோவை அருகே பேரூர், தொண்டாமுத்தூர், ஆலாந்துறை உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் நேற்று மாலை இடி - மின்னலுடன் கனமழை பெய்தது. புதுப்பாளையம் அருகே ஒருவரின் வீட்டின் பின்பக்கத்தில் உள்ள தென்னை மரத்தில் மின்னல் தாக்கியதில் அந்த மரம் தீப்பிடித்து எரிந்தது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow