தட்டச்சு வேகப் போட்டி தேர்வு : மின்னல் வேகத்தில் போட்டிப் போட்ட மாணவர்கள் !!!
தட்டச்சு வேகப் போட்டி தேர்வு : மின்னல் வேகத்தில் போட்டிப் போட்ட மாணவர்கள் !!!

தட்டச்சு வேகப் போட்டி தேர்வு : மின்னல் வேகத்தில் போட்டிப் போட்ட மாணவர்கள் !!!
தேனி, டைப்ரைட்டிங் பள்ளிகள் ஒருங்கிணைப்பு குழு சார்பில் மாவட்ட அளவிலான டைப்ரைட்டிங் வேக சாதனையாளர் போட்டி நடத்தப்பட்டது.
இந்த போட்டியில் தேனி மாவட்டத்தில் உள்ள 17 டைப்ரைட்டிங் நிறுவனத்தை சேர்ந்த சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் கலந்து கொண்டு போட்டியில் பங்கு பெற்றனர்.
13 வயது முதல் 25 வயதுக்கு உட்பட்ட போட்டியாளர்கள் இதில் பங்கேற்று ஒரு நிமிடத்திற்கு 45 வார்த்தைகள் என ஒரு மணி நேரத்தில் 2,700 வார்த்தைகளை தட்டச்சு செய்பவர்களை சாதனையாளராக அங்கீகரிக்கப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டது.
இந்த போட்டியில் முதல் பரிசு வென்ற மாணவிக்கு ரூபாய் 10 ஆயிரம் பரிசு, சுழற் கோப்பை மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. மேலும் இரண்டாம், மூன்றாம் இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
மாணவர்களுக்கு இடையே தட்டச்சு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் அரசு வேலை வாய்ப்பில் தட்டச்சு பயில்வது மூலமாக கிடைக்கும் வாய்ப்புகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த போட்டி நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
What's Your Reaction?






