தமிழக ஆளுநர் R.N.ரவியை ஒன்றிய அரசு திரும்ப பெற வேண்டும் - இந்திய கலாச்சார நட்புறவுக் கழகத்தின் மாநில பொதுக் குழுவில் தீர்மானம் !!!
தமிழக ஆளுநர் R.N.ரவியை ஒன்றிய அரசு திரும்ப பெற வேண்டும் - இந்திய கலாச்சார நட்புறவுக் கழகத்தின் மாநில பொதுக் குழுவில் தீர்மானம் !!!
தமிழக ஆளுநர் R.N.ரவியை ஒன்றிய அரசு திரும்ப பெற வேண்டும் - இந்திய கலாச்சார நட்புறவுக் கழகத்தின் மாநில பொதுக் குழுவில் தீர்மானம் !!!
இந்திய கலாச்சார நட்புறவுக் கழகத்தின் தமிழ்நாடு மாநில பொதுக் குழு கூட்டம் தூத்துக்குடி மாவட்ட தலைவர் சுப்பாராஜ் தலைமையில், மாநில பொதுச் செயலாளர் S.ராதாகிருஷ்ணன், மாநில பொருளாளர் S.கோட்டியப்பன் ஆகியோர் முன்னிலையில் நடந்தது. இதில் மாநில குழு உறுப்பினர் ஜெயஸ்ரீ கிருஸ்டோபர் வரவேற்புரை நிகழ்த்தினார். மார்க்ஸிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீத்தாராம்யெச்சூரி, அகில இந்திய விவசாயிகள் சங்கத் தலைவர் அதுல்குமார் அஞ்சான், மனித உரிமை போராளி சாய்பாபா ஆகியோர் மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் M.அப்பாத்துரை எழுதிய எனது அரசியல் நினைவலைகள் நூலினை மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் V.அழகிரிசாமி வெளியிட்டார் நூலினை ம.தி.மு.க மாநில ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர் விநாயகா ரமேஷ், இந்திய கலாச்சார நட்புறவுக் கழக நிர்வாகிகள் அபிராமிமுருகன், நம்சீனிவாசன், சதீஷ்குமார் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
சட்டக் கல்லூரியில் மாநில அளவில் முதல் மதிப்பெண் பெற்று இரண்டு தங்க பதக்கங்கள் பெற்ற வழக்கறிஞர் கார்மல் ஜென்சியை பாராட்டி துணை பொதுச் செயலாளர் இந்திரஜித் விருது வழங்கினார்.
போர் வெறியுடன் செயல்படும் இஸ்ரேலை கண்டித்து 104 நாடுகள் கையெழுத்து இட்டு ஐநா சபையில் கொண்டு வந்த தீர்மானமாத்தை ஆதரிக்காத இந்திய அரசை கண்டித்தும் உடனடியாக போர் நிறுத்தத்தை வலியுறுத்தியும், சமீபத்தில் தமிழ்நாடு ஆளுநர் ரவி கலந்து கொண்ட தொலைக்காட்சி நிகழ்ச்சியில் வேண்டுமென்றே தமிழ்த் தாய் வாழ்த்து தவறாக இசைக்கப்பட்டது. எனவே தமிழுக்கும், தமிழ்நாட்டிற்கும் எதிராக தொடந்து செயல்பட்டு வரும் அவரை ஒன்றிய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும். கோவை ஈசா யோகா மையத்தில் நடந்து வரும் பாலியல் வன்முறைகள், மர்ம கொலைகள், போதைப் பொருள் பயன்பாடு ஆகியவற்றின் மீது வழக்கு பதிவு செய்த தமிழ்நாடு அரசை பாராட்டியும் மாநில குழு தீர்மானங்களை மாநில செயலாளர் க.தமிழரசன் முன்மொழிந்து பேசினார். நிகழ்ச்சியில் மாநில நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள் தூத்துக்குடி மாவட்ட இஸ்க்கப் நிர்வாகிகள் பெஞ்சமின் பிராங்கிளின், ரவிகுமார், சுபேதார் கருப்பசாமி, கல்லூரணி ராதாகிருஷ்ணன், அருள்தாஸ், மேரிஷீலா, நல்லய்யா, பாலாசிங், இசக்கி ஆகியோர் கலந்து கொண்டனர்.
What's Your Reaction?