பராமரிப்பு பணிகள் : போத்தனூர், மேட்டுப்பாளையம் செல்லும் ரயில்கள் ரத்து - ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு !!
பராமரிப்பு பணிகள் : போத்தனூர், மேட்டுப்பாளையம் செல்லும் ரயில்கள் ரத்து - ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு !!

பராமரிப்பு பணிகள் : போத்தனூர், மேட்டுப்பாளையம் செல்லும் ரயில்கள் ரத்து - ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு !!!
கோவை, வடகோவை மற்றும் காரமடை ரயில் நிலையப் பகுதிகளில் நடைபெற உள்ள பொறியியல் பராமரிப்புப் பணிகள் காரணமாக போத்தனூர் – மேட்டுப் பாளையம் ரயில் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதுதொடர்பாக, சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பு:
ரயில் பாதையில் பொறியியல் பராமரிப்புப் பணி காரணமாக போத்தனூர் - மேட்டுப்பாளையம் ரயில் (எண்: 06816), மேட்டுப்பாளையம் போத்தனூர் ரயில் (எண்: 06817) ஆகிய ரயில்கள் வியாழக்கிழமையும் (அக்டோபர் 24), மேட்டுப்பாளையம் - போத்தனூர் ரயில் (எண்:06815), போத்தனூர் - மேட்டுப்பாளையம் ரயில் (எண்: 06816) ஆகிய ரயில்கள் ஞாயிற்றுக்கிழமையும் (அக்டோபர் 27) முழுவதும் ரத்து செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
What's Your Reaction?






