கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவம் : இன்றுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்து - பலத்த பாதுகாப்பில் ரயில் நிலையம் !!!
கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவம் : இன்றுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்து - பலத்த பாதுகாப்பில் ரயில் நிலையம் !!!
கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவம் : இன்றுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்து - பலத்த பாதுகாப்பில் ரயில் நிலையம் !!!
கோவை உக்கடம் கார் குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்று இன்றுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் கோவை ரயில் நிலைய வளாகம் முழுவதும் வெடிகுண்டு சோதனை நிபுணர்கள் மற்றும் ரயில்வே காவல் துறையினர் மோப்ப நாயுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் 23ம் தேதி கோவை உக்கடம் அருள்மிகு சங்கமேஸ்வரர் திருக்கோவில் முன்பாக கார் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது.இந்த சம்பவத்தில் ஜமேஷா முபீன் என்பவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் அதில் தொடர்புடையதாக தற்போது வரை பதினெட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் அந்த சம்பவம் நிகழ்ந்து இன்றுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடைகிறது. இதனிடையே கோவை மாநகரின் முக்கிய கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், விமான நிலையம், நட்சத்திர விடுதிகள் என பல்வேறு இடங்களுக்கும் கடந்த சில தினங்களாக வெடிகுண்டு மிரட்டல்கள் மின்னஞ்சல் மூலமாக வந்து கொண்டிருக்கிறது.இந்த சூழலில் தீபாவளி பண்டிகையும் நெருங்கி வருவதால் கோவை மாநகரம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.அதன் ஒரு பகுதியாக கோவை ரயில் நிலைய வளாகம் முழுவதும் இன்று வெடிகுண்டு சோதனை நிபுணர்கள் மற்றும் ரயில்வே காவல்துறையினர் தீவிர சோதனை நடத்தினர்.ரயில்களில் ஏறி பயணிகளை முழுமையாக சோதனை செய்த வெடிகுண்டு சோதனை நிபுணர்கள் நடைமேடை, பயணிகளின் காத்திருப்பு அறை, பயண சீட்டு எடுக்கும் இடம் உட்பட ரயில் நிலைய வளாகம் முழுவதும் தீவிர சோதனை நடத்தினர்.ம்மேலும் மோப்பநாய் மற்றும் மெட்டல் டிடக்டர் கருவிகள் உடன்ன்பயணிகளின் உடைமைகளையும் முழுமையாக பரிசோதித்தனர் இந்த திடீர் சோதனை காரணமாக கோவை ரயில் நிலைய வளாகம் பரபரப்புடன் காணப்பட்டது.
What's Your Reaction?