சி.எஸ்.ஐ திருமண்டலத்தில் ரூ.25 கோடி வருங்கால வைப்பு நிதி தொகை மோசடி : வழக்கை மறுவிசாரணை நடத்த உத்தரவு !!!
சி.எஸ்.ஐ திருமண்டலத்தில் ரூ.25 கோடி வருங்கால வைப்பு நிதி தொகை மோசடி : வழக்கை மறுவிசாரணை நடத்த உத்தரவு !!!
சி.எஸ்.ஐ திருமண்டலத்தில் ரூ.25 கோடி வருங்கால வைப்பு நிதி தொகை மோசடி : வழக்கை மறுவிசாரணை நடத்த உத்தரவு !!!
கோவை போத்தனூர் பகுதியைச் சேர்ந்தவர் கெர்சோம் ஜேக்கப் (62).இவர் கடந்த 17 ஆண்டுகளாக சிஎஸ்ஐ கோவை திருமண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் தேவாலய பணிகளை செய்து வருகிறார். கடந்த 2005 ம் டிசம்பர் மாதம் முதல் 2020 ஆம் ஆண்டு வரை அவருடைய சம்பளத்திலிருந்து வருங்கால வைப்பு நிதி தொகை மாதம் தோறும் சிஎஸ்ஐ கோவை திருமண்டலத்திற்கு அனுப்பி உள்ளார்.
வருங்கால வைப்பு நிதி தொகை எவ்வளவு உள்ளது என சிஎஸ்ஐ கோவை அலுவலகத்திற்கு பலமுறை கடிதம் அனுப்பி கேட்டும் சரியான பதில் அளிக்காமல் இருந்துள்ளனர். இதைத் தொடர்ந்து வருங்கால வைப்பு நிதி அதிகாரியிடம் நேரில் அணுகி கேட்ட போது கடந்த 2019 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல்தான் கோவை சிஎஸ்ஐ திருமண்டலத்தில் வருங்கால வைப்பு நிதி கணக்கு துவக்கப்பட்டுள்ள தகவல் தெரிய வந்தது. இதை தொடர்ந்து திருமண்டல பேராயர் திமோத்தி ரவீந்தர், நிதி நிர்வாகி செல்வகுமார் மற்றும் நிதி அதிகாரி மங்களதாஸ் ஆகியோரிடம் இது குறித்த விசாரித்த போது அவர்கள் பதில் அளிக்க மறுத்து விட்டனர். கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக சிஎஸ்ஐ திருமணத்தில் செயல்பட்டு வரும் 125 க்கும் மேற்பட்ட தேவாலயங்களில் பணிபுரியும் ஊழியர்களின் சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்யப்படும் வருங்கால வைப்பு நிதி தொகையை முறையாக செலுத்தாமல் மோசடி செய்தது தெரியவந்தது .இதைத் தொடர்ந்து தேவாலய ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி தொகை சுமார் 25 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி நடந்ததாக
.கெர்சோம் ஜேக்கப் கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார்
திருமண்டல பேராயர் திமோத்தி ரவீந்தர், நிதி நிர்வாகி செல்வகுமார் மற்றும் நிதி அதிகாரி மங்களதாஸ் , செயலாளர் சார்லஸ் ஆகிய நான்கு பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் சிஎஸ்ஐ தரப்பில் 2016 ஆம் ஆண்டுக்குப் பிறகுதான் கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு வருங்கால வைப்பு நிதி பிடிப்பதற்கான செயல்பாடு அமலுக்கு வந்துள்ளது என்று விளக்கம் அளித்தனர். இதைத்தொடர்ந்து மாநகர குற்றப்பிரிவு போலீசில் பதிவு செய்யப்பட்ட வழக்கு முடித்து வைக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கோவை சிஎஸ்ஐ திருமண்டலத்தில் ஊழியர்களின் சம்பளத்தில் பிடிக்கப்பட்ட வைப்பு நிதி தொகையை சரியாக செலுத்தாததால் சிஎஸ்ஐ திருமண்டல வங்கி கணக்கை முடக்கி வருங்கால வைப்பு நிதி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர் . மேலும் வங்கி கணக்கில் இருந்து அபராத தொகையோடு 2 கோடி ரூபாயை வருங்கால வைப்பு நிதிக்கு எடுத்துக் கொண்டனர் .இந்த விபரங்களை அடிப்படையாகக் கொண்டு கெர்சோம் ஜேக்கப் கோவை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தொடர்ந்து கோவை சிஎஸ்ஐ திருமண்டலத்தில் தொடர்ந்து வருங்கால வைப்பு தொகை செலுத்துவதில் மோசடி நடைபெற்று வருவதாகவும் ஏற்கனவே 25 கோடி ரூபாய் மோசடி வழக்கு முடித்து வைக்கப்பட்டது தவறானது என்றும் மனு தாக்கல் செய்து இருந்தார். இதனை விசாரித்த நீதிபதி கோவை சிஎஸ்ஐ திருமண்டலத்தில் 25 கோடி ரூபாய் வருங்கால வைப்பு நிதி தொகை மோசடி குறித்து ஏற்கனவே முடித்து வைக்கப்பட்ட வழக்கை மறுவிசாரணை நடத்த வேண்டும் என கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசாருக்கு அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
What's Your Reaction?