காவலர்களை மதிக்காத குமரி மாவட்ட எஸ்.பி - க்கு கண்டனம் : ஓய்வு பெற்ற காவல் துறை, தீயனைப்பு துறை அலுவலர் சங்க தீர்மானம் !!!

கன்னியாகுமரி மாவட்ட ஓய்வு பெற்ற காவல் துறை மற்றும் தீயனைப்பு துறை அலுவலர் சங்க 44 வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் நாகர்கோவிலில் நடைப்பெற்றது. இச்சங்கத்தின் மாநில தலைவர் கே. வேலுசாமி, மாவட்ட தலைவர் ஓய்வு பெற்ற DSP செல்வராஜ் உள்ளிட்ட ஓய்வு பெற்ற போலீசார் ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர். கட்டத்தில், கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் காவல் துறைக்கு சங்கம் அமைக்க அனுமதி அந்தந்த மாநில அரசுகள் வழங்கி உள்ளன. அது போல் தமிழக அரசும் அனுமதி வழங்க வேண்டும் என்றும், காவல் துறையில் இரண்டாம் நிலை காவலர்களின் அடிப்படை சம்பளம் அமைச்சுப் பணியாளர்களின் இளநிலை உதவியாளர்களுக்கு இணையாக உயர்த்த பட வேண்டும் என்றும், மருத்துவ காப்பீடு திட்டத்தில் உள்ள குறைபாடுகள் களையப்பட வேண்டும் என்றும், தீயனைப்பு துறையினருக்கு தரமான குடியிருப்புகள் கட்டி கொடுக்க வேண்டும் என்றும். மத்திய அரசு தற்போது தனது பணியாளர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்தியது போல தமிழக அரசும் அமுல் படுத்த முன்வர வேண்டும் என்றும் குமரி மாவட்ட எஸ்.பி சுந்தர வதனம் போலீசாரை மதிக்காத நடவடிக்கைகளுக்கு கண்டனம் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன.
What's Your Reaction?