உணவு தேடி, எங்கு செல்வது என்று யோசனை செய்து நிதானமாக நடத்து செல்லும் ஒற்றைக் காட்டு யானை - செல்போன் வீடியோ காட்சிகள் !!!
உணவு தேடி, எங்கு செல்வது என்று யோசனை செய்து நிதானமாக நடத்து செல்லும் ஒற்றைக் காட்டு யானை - செல்போன் வீடியோ காட்சிகள் !!!
உணவு தேடி, எங்கு செல்வது என்று யோசனை செய்து நிதானமாக நடத்து செல்லும் ஒற்றைக் காட்டு யானை - செல்போன் வீடியோ காட்சிகள் !!!
கோவை, தொண்டாமுத்தூர், தடாகம், பேரூர், நரசிபுரம், கெம்பனூர் போன்ற பகுதிகளில் கடந்த சில மாதங்களாக முகாமிட்டு சுற்றித் திரியும் ஒற்றைக் காட்டு யானை. அவ்வப் போது ஊருக்குள் புகுந்து வீடுகளில் மற்றும் அப்பகுதியில் உள்ள கடைகளை உடைத்து அங்கு வைத்து இருக்கும் அரிசி, பருப்பு போன்ற உணவுப் பொருட்கள் மற்றும் விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை உண்டு சேதப்படுத்தி செல்வதும், அதை தடுக்க வரும் விவசாயிகள் மற்றும் பொதுமக்களை தாக்குவதும் தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்நிலையில் இன்று காலை மருதமலை அருகே உள்ள வடவள்ளி, ஐ.ஓ.பி காலனிக்கு வனப் பகுதியில் இருந்து வந்த ஒற்றை காட்டு யானை எங்கு உணவு உள்ளது என்று யோசனை செய்து நிதானமாக நடந்து செல்கிறது.
அந்த யானையை பின் தொடர்ந்து சென்ற அப்பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து உள்ளார். அந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
யானைகள் கூட்டத்துடன் இருந்தால் உடனடியாக மனிதர்களை தாக்கி சேதத்தை ஏற்படுத்தாது, ஆனால் இதுபோன்று தனியாக சுற்றித் திரியும் ஒற்றை காட்டு யானையிடம் சிக்கிக் கொண்டால் உடனடியாக மனிதர்களை தாக்கி கொன்றுவிடும் ஆபத்து உள்ளது. இதனால் அப்பகுதி விவசாயிகளும், பொதுமக்களும் ஒற்றைக் காட்டு யானையை கண்டு அச்சத்தில் உள்ளனர்.
தமிழக அரசும், வனத் துறையினர் அந்த ஒற்றைக் காட்டு யானை ஊருக்குள் வருவதை தடுத்து நிரந்தரமாக வனப் பகுதிக்குள் விரட்ட தொடர்ந்து கோரிக்கை முன்வைத்து வருகின்றனர்.
What's Your Reaction?