கழிவு நீர் அகற்றுவது தொடர்பாக ஊராட்சி மன்ற துணைத் தலைவர் - கிராம நிர்வாக அலுவலர் இடையே மோதல்

கழிவு நீர் அகற்றுவது தொடர்பாக ஊராட்சி மன்ற துணைத் தலைவர் - கிராம நிர்வாக அலுவலர் இடையே மோதல்

 - 
Oct 11, 2024 - 14:00
 0  22

கழிவு நீர் அகற்றுவது தொடர்பாக ஊராட்சி மன்ற துணைத் தலைவர் - கிராம நிர்வாக அலுவலர் இடையே மோதல்...

 ஊராட்சி மன்ற துணைத் தலைவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி !!! 

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள அகிலாண்டபுரம் ‌ கிராமத்தைச் சேர்ந்தவர் பால்ராஜ். இவர் அகிலாண்டபுரம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவராக கடந்த 2006, 2011 என இரண்டு முறை இருந்து உள்ளார். தற்போது அகிலாண்டபுரம் ஊராட்சி பொது பெண்ணுக்காக மாற்றப்பட்டதால் அவரது மனைவி சரோஜா தலைவராக உள்ளார். பால்ராஜ் துணைத் தலைவராக உள்ளார். இந்த சூழ்நிலையில் கடந்த மூன்றாம் தேதி அந்த கிராமத்தில் கழிவு நீர் தேங்கி இருப்பதை அகற்றுவது தொடர்பாக பால்ராஜ் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலருடன் ஆய்வு நடத்தி உள்ளார். அப்போது கழிவு நீரை வெளியேற்றுவது தொடர்பாக அந்த கிராமத்தில் வசிக்கும் வெள்ளாலங்கோட்டையில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வரும் கருப்பசாமி என்பவருக்கும் , பால்ராஜ்-க்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பாக மாறியதாக கூறப்படுகிறது.

இதில் காயமடைந்த ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பால்ராஜ் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இருவரும் கொடுத்த புகாரின் அடிப்படையில் கயத்தார் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்த நிலையில் தன்னை அவதூறாக பேசி, ஜாதி ரீதியாக திட்டி, தன்னை தாக்கிய கிராம நிர்வாக அலுவலர் மீது நடவடிக்கை எடுக்காமல் போலீசார் காலதாமம் செய்து வருவதாகவும், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பால்ராஜ் தெரிவித்து உள்ளார். 

இதுகுறித்து காவல் துறையிடம் கேட்ட போது இருதரப்பினரும் புகார் தெரிவித்து உள்ளனர். புகாரி விசாரித்து வருவதாகவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்து உள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow