அருள்மிகு ஸ்ரீ கண்ணாத்தா திருக்கோயிலில் கும்பாபிஷேகம் : சிறப்பாக நடைபெற்ற மண்டலாபிஷேகம் !!!

அருள்மிகு ஸ்ரீ கண்ணாத்தா திருக்கோயிலில் கும்பாபிஷேகம் : சிறப்பாக நடைபெற்ற மண்டலாபிஷேகம் !!!

Nov 30, -0001 - 00:00
 0  27

தேனி நகர் பகுதியில் அருள்மிகு ஸ்ரீ கண்ணாத்தா திருக்கோயில் அமைந்து உள்ளது. இந்த திருக்கோயிலில் கும்பாபிஷேகம் நிறைவு பெற்று 48 நாட்கள் முடிவடைந்ததை முன்னிட்டு மண்டலபிஷேகம் இன்று நடைபெற்றது 

முன்னதாக கோயில் வளாகத்தில் யாக குண்டம் அமைக்கப்பட்டு அதில் பல வித மூலிகை பொருட்கள் கொண்டு சிறப்பாக யாகம் வளர்க்கப்பட்டு பூர்ணாஹூதி சமர்ப்பிக்கப்பட்டது 

பின்னர் மூலவர் அம்மனுக்கு பால், தயிர், சந்தனம், தேன், மஞ்சள் உள்ளிட்ட பலவித திரவியங்கள் கொண்டு சிறப்பாக அபிஷேகங்கள் நடைபெற்றன. தொடர்ந்து பூஜிக்கப்பட்ட கலச நீரை சுமந்து கொண்டு கோயில் வளாகத்தை சுற்றி வந்து அம்மனுக்கு கலசாபிஷேகம் செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மூலவர் அம்மனுக்கு வண்ணமலர் மாலைகளால் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சி தந்தார் தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் காட்சி தந்த அம்மனுக்கு பஞ்ச கற்பூர ஆரத்தியுடன் மகா தீபாராதனை காட்டப்பட்டது.

இதில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மண்டலபிஷேகம் நிகழ்ச்சியை முன்னிட்டு அம்மனுக்கு நடைபெற்ற சிறப்பு வழிபாடு பூஜை கண்டு தரிசித்து சென்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow