அமைச்சர் செந்தில் பாலாஜியின் இருக்கைக்கு பின்பு யார் நிற்பது ? தி.மு.க நிர்வாகிகள் மத்தியில் லேசான தள்ளு, முள்ளு !!!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் இருக்கைக்கு பின்பு யார் நிற்பது ? தி.மு.க நிர்வாகிகள் மத்தியில் லேசான தள்ளு, முள்ளு !!!

Oct 15, 2024 - 16:10
 0  11

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்தான ஆலோசனை கூட்டம் அனைத்து துறை அதிகாரிகளுடன் நடைபெற்றது. கூட்டம் முடிந்து செய்தியாளர் சந்திப்பதற்காக ஏற்பாடுகள் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செய்யப்பட்டு இருந்தது. அமைச்சர் வருவதற்கு முன்பு இருக்கைகள் போடப்பட்டது. அமைச்சரின் பின்பு யார் நிற்பது என்பது தொடர்பாக மத்தியில் லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

சிறைச்சென்று 15 மாதங்கள் கழித்து செந்தில்பாலாஜி கோவை வந்துள்ள நிலையில் அவர் இருக்கையின் பின்பு யார் நிற்பது என்பதில் திமுக நிர்வாகிகள் மத்தியில் லேசான தள்ளு முள்ளு ஏற்பட்டது.

முதல் தளத்திலிருந்து செந்தில் பாலாஜி கீழ் தளத்திற்கு வந்த போது தொண்டர்கள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகர காவல் ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகளும் சிக்கிக் கொண்டனர்.பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தொண்டர்களை விலக்கிவிட்டு அதிகாரிகள் செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்க உதவி செய்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow