ஆயுத பூஜை : உயிர் காக்கும் 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள், உபகரணங்களுக்கு பூஜை செய்த ஊழியர்கள் !!!
ஆயுத பூஜை : உயிர் காக்கும் 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள், உபகரணங்களுக்கு பூஜை செய்த ஊழியர்கள் !!!

ஆயுத பூஜை : உயிர் காக்கும் 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள், உபகரணங்களுக்கு பூஜை செய்த ஊழியர்கள் !!!
தமிழகம் முழுவதும் இன்று ஆயுத பூஜை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. வருடம் முழுவதும் தொழிலில் உறுதுணையாக இருக்கக்கூடிய ஆயுதங்கள், இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களுக்கு பூஜை மற்றும் வழிபாடு செய்து கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி திண்டுக்கல்லில் பொது மக்களின் உயிர்காக்கும் 108 ஆம்புலன்ஸில் பணிபுரியக்கூடிய மருத்துவ உதவியாளர்கள், டிரைவர்கள் தங்களது வாகனத்தை கழுவி சுத்தம் செய்து அதற்கு சந்தனம் குங்குமம் பொட்டு வைத்து மாலை அணிவித்து, வாழைமரம் கட்டியும், ஸ்ட்ரெச்சர், ஸ்டெதஸ்கோப், போன்ற உபகரணங்களை சுத்தம் செய்து பொட்டு வைத்து தேங்காய் பழம் உடைத்து இறைவனை வேண்டி வழிபாடு செய்தனர். அதேபோல் 108 இருசக்கர வாகனத்தையும் சுத்தம் செய்து பொட்டு வைத்து மாலையிட்டு வழிபாடு செய்தனர். பின்னர் எந்த பிரச்சனையும் இன்றி நாள் தோறும் வாகனங்கள் நன்றாக ஓட வேண்டும் அதேபோல் விபத்துக்கள் மற்றும் விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புகள் குறைய வேண்டும் என இறைவனை வேண்டி பூசணிக்காயில் சூடம் ஏற்றி வாகனங்களுக்கு திருஷ்டி கழித்து பூசணிக்காயை உடைத்தனர். தொடர்ந்து 108 ஆம்புலன்ஸ் வாகனங்களை நகர்ப்பகுதியில் ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். இந்த நிகழ்ச்சியில் வாகன ஓட்டுனர்கள், மருத்துவ உதவியாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
What's Your Reaction?






