தூத்துக்குடி அருகே கடலில் குளித்துக் கொண்டு இருந்த 5 பெண்கள் : அலையில் இழுத்துச் சென்று இருவர் உயிரிழப்பு, 3 பேர் மீட்பு !!!

மதுரை ஜி. ஆர். நகரை சேர்ந்த 20 க்கும் மேற்பட்டோர் தூத்துக்குடி மாவட்டம் வேம்பார் அருகே பெரியசாமிபுரத்தில் உள்ள குலதெய்வ கோயிலில் சாமி கும்பிடுவதற்காக கடந்த 15 ஆம் தேதி வந்து உள்ளனர். இந்நிலையில் இன்று காலையில் வேம்பார் பெரியசாமிபுரம் கடலில் அவர்கள் குளித்துக் கொண்டு இருந்தனர். அப்போது கடலில் காற்றின் வேகத்தால் அலை அதிகமாக இருந்து உள்ளது. கடலில் குளித்துக் கொண்டு இருந்த மதுரை ஜி.ஆர் நகரை சேர்ந்த இலக்கியா (21), கன்னியம்மாள் (50), முருக லட்சுமி (38), ஸ்வேதா (22), அனிதா (29) ஆகிய ஐந்து பெண்கள் கடல் அலையில் சிக்கி கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டு உள்ளனர். அவர்களின் கூச்சல் சத்தத்தை கேட்டு அங்கு இருந்த மீனவர்கள் கடலில் குதித்து ஐந்து பேரையும் மீட்டதில் இலக்கியா, கன்னியம்மாள் ஆகிய இருவர் அலையில் சிக்கி மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்து உள்ளனர்.
முருக லட்சுமி, ஸ்வேதா, அனிதா ஆகிய மூன்று பெண்களுக்கு வேம்பார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக வேம்பார் கடலோர காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
What's Your Reaction?