செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனாத சுவாமி திருக்கோவில் : ஐப்பசி திருக் கல்யாண திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனாத சுவாமி திருக்கோவில் : ஐப்பசி திருக் கல்யாண திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனாத சுவாமி திருக்கோவில் : ஐப்பசி திருக் கல்யாண திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் !!!
தூத்துக்குடி, கோவில்பட்டியில் உள்ள செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனாத சுவாமி கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் முக்கிய விழாவான ஐப்பசி திருக் கல்யாண திருவிழா கொடி யேற்றத்துடன் தொடங்கியது.
கொடியேற்றத்தை முன்னிட்டு சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து அம்பாள் சன்னதி முன்பு உள்ள கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, அலங்காரத்துக்குப் பின் கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டு சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி, அம்பாளை தரிசனம் செய்தனர்.
இன்று முதல் தொடங்கி வரும் 29 - ந் தேதி வரை 12 நாள்கள் திருவிழா நடக்கிறது. ஒவ்வொரு நாளும் காலை, மாலை என செண்பகவல்லி அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத் தேரோட்டம் வரும் 26 ந் தேதியும், 29 ந் தேதி திருக்கல்யாணமும் நடைபெறுகிறது.
What's Your Reaction?






