ஏரி கரை மண் அரிப்பு : உடனடியாக நடவடிக்கை எடுத்த தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் !!!
ஏரி கரை மண் அரிப்பு : உடனடியாக நடவடிக்கை எடுத்த தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் !!!
ஏரி கரை மண் அரிப்பு : உடனடியாக நடவடிக்கை எடுத்த தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் !!!
தருமபுரி மாவட்டத்தில், பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக கன மழை பொழிந்து வந்தன. இதன் காரணமாக நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம், மாதேமங்கலம் ஊராட்சி, மாதேமங்கலம் ஏரிக்கு மலைப் பகுதியில் இருந்து தற்பொழுது நீர்வரத்து அதிகரித்து உள்ளன. இந்த ஏரியானது 270 ஏக்கர் பரப்பளவும், 32 மில்லியன் கன அடி தண்ணீர் கொள்ளளவும் கொண்டது. விவசாய பாசன பரப்பளவு சுமார் 405 ஏக்கருக்கும் அதிகமான பாசன வசதியை கொண்டதாகும். ஏரியின் கரைப்பகுதி வலுவான நிலையில் இல்லாத காரணத்தால் ஏரியின் கரையில் மண் அரிப்பு ஏற்பட்டு, ஏரியின் தண்ணீர் வீணாக செல்லும் சூழ்நிலை உள்ளன. ஏரிக்கரையின் மண் அரிப்பு குறித்து தகவல் அறிந்த தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன் ஏரி அமைந்து உள்ள பகுதிக்கு பொதுமக்களுடன் நேரடியாக சென்று பார்வையிட்டார். ஏரிக்கரையின் மண் அரிப்பை தடுக்க பொதுப் பணித் துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்து உடனடியாக ஏரியின் கரையை வலுப்படுத்த வலியுறுத்தினார். பொதுப் பணித் துறை அதகாரிகள் நேரில் வந்து பார்வையிட்டு உடனடியாக கரையின் மண் அரிப்பை தடுக்கும் வகையில், ஏரிகரையை சீரமைக்கும் பணியில் ஈடுப்பட்டனர். இந்த நிகழ்விற்கு சட்டமன்ற உறுப்பினருக்கும், அதகாரிகளுக்கும் பொதுக்கள் நன்றியை தெரிவித்தனர்.
இந்நிகழ்வில், பொதுப் பணித் துறை உதவி பொறியாளர் மோகனப்பிரியா, உதவி செயற் பொறியாளர் கணேசன், ஏரியின் ஆயக்கட்டுத் தலைவர் கந்தசாமி, பா.ம.க ஒன்றிய செயலாளர் ஒ.கே.கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய பொறுப்பாளர்கள் ரங்கநாதன், வையாபுரி உள்ளிட்ட ஊர் பொது மக்கள் பலர் இருந்தனர்.
What's Your Reaction?