உத்தமர் காந்தி விருது மற்றும் டாக்டர் பட்டம் பெற்ற வேண்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் பாராட்டு !!!
உத்தமர் காந்தி விருது மற்றும் டாக்டர் பட்டம் பெற்ற வேண்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் பாராட்டு !!!
உத்தமர் காந்தி விருது மற்றும் டாக்டர் பட்டம் பெற்ற வேண்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் பாராட்டு !!!
காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உட்பட்ட வேண்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவராக சரளா குமரன் பல்வேறு மக்கள் பணியாற்றி வருகின்றார்.
இந்த நிலையில் சென்னையில் தமிழகத்தில் காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கடலூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மூன்று ஊராட்சி மன்ற தலைவர்களுக்கும், சிறந்த தொழில் நிறுவனங்கள், சிறந்த கல்வி சேவைக்கு ஆசிரியர் செம்மல் விருது, சிறந்த திரைப்பட கலைஞர்கள் ஆகியோருக்கு அகாடமி ஆப் யுனிவர்சல் குளோபல் பீஸ் மற்றும் மகா பைன் ஆர்ட்ஸ் சார்பில் விருது வழங்கும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் மகா பைன் ஆர்ட்ஸ் செயலாளர் டாக்டர் அனுராதா ஜெயராமன் வரவேற்புரை வழங்கி அமெரிக்கன் டிப்ளமோ விஞ்ஞானி அம்பாசிடர் பேராசிரியர் டாக்டர் மதுகிருஷ்ணன் வாழ்த்துக்களுடன் துணை வேந்தர் டாக்டர் புரோட்டிமா முத்துகிருஷ்ணன், சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ்.கே.கிருஷ்ணன் பங்கேற்று 12 நபர்களுக்கு விருதுகளை வழங்கினார்.
இந்நிகழ்வில் வேண்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் சரளா குமரன் சிறப்பாக சமூக சேவை ஆற்றியதற்காக உத்தமர் காந்தி விருது மற்றும் தி அமெரிக்கன் பல்கலைக் கழக சிறந்த சமூக சேவகருக்குரிய கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டதற்கு அவருடைய கடுமையான உழைப்பும் தொடர் மக்கள் பணியும் ஊராட்சி பணிகளில் அவருடைய ஈடுபாடும் தான் காரணம் என்றும், அதற்காக சமூக அலுவலர் மற்றும் அப்பகுதி மக்கள் பல பாராட்டுகளை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
What's Your Reaction?