கோவையில் ரயில்வே பாலத்திற்கு கீழ் தண்ணீரில் சிக்கிய தனியார் பேருந்து : பத்திரமாக பயணிகள் மீட்பு - நீண்ட நேரம் போராட்டத்துக்கு பின் தீயணைப்பு வீரர்களுடன் உதவியுடன் பொக்லைன் மூலம் வெளிய எடுக்கப்பட்ட பேருந்து !!!

கோவை நகரில் இன்று மாலை பெய்த கனமழையில் ரயில்வே சுரங்கப் பாதைகளில் தண்ணீர் தேங்கியது. குறிப்பாக கோவை சாய்பாபா காலனியில் இருந்து சிவானந்தா காலனி செல்லும் வழியில் உள்ள ரயில்வே சுரங் பாதையில் பயணிகளுடன் சென்ற தனியார் பேருந்து தேங்கிய மழை நீரில் சிக்கிக் கொண்டது. இதனை அடுத்து பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் பயணிகளை மீட்டதுடன் பேருந்தினை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதனிடையே சம்பவ இடத்திற்கு வந்த மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் பேருந்தை மீட்கும் பணிகளை பார்வையிட்டனர்.
இதனை தொடர்ந்து பொக்லைன் உதவியுடன் தண்ணீரில் சிக்கிய தனியார் பேருந்து மீட்கப்பட்டது. இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தனியார் பேருந்து மீட்கப்பட்டது. பாலத்தின் கீழ் பகுதியில் தண்ணீர் தேங்கியாலும், தனியார் பேருந்து சிக்கிக் கொண்டதாலும் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு இருந்தது.
What's Your Reaction?