மளிகை கடையில் ராஜஸ்தானை சேர்ந்த தந்தை, மகன் தூக்கிட்டு தற்கொலை - கடன் தொல்லையா ? அல்லது வேறு காரணமா ? செங்குன்றம் போலீசார் விசாரணை !!!

சென்னை, செங்குன்றம் அடுத்த பாடியநல்லூரில்
ராஜஸ்தானை சேர்ந்த மாதுராம் (30) என்பவர் வசித்து வந்தார். மனைவி மற்றும் இரண்டு மகன்களுடன் வசித்து வந்த போது மாதுராம் அதே பகுதியில் மளிகை கடை மற்றும் பேன்சி ஸ்டோர் ஒன்றை நடத்தி வருகிறார். நேற்று நள்ளிரவில் கடையை சுத்தம் செய்ய போவதாக மனைவியிடம் கூறி மகனுடன் கடைக்கு வந்த மாதுராம் இன்று காலை ஆகியும் வீடு திரும்பாததால் தொலைபேசியில் அழைத்த போது பதிலளிக்கவில்லை.
அதிர்ச்சி அடைந்த, மாதுராமின் மனைவி 100 அவசர காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மளிகை கடையின் ஷட்டரை உடைத்து பார்த்த போது தந்தை, மகன் ஆகிய இருவரும் தூக்கிட்டு
இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனை அடுத்து செங்குன்றம் போலீசார் இருவரது சடலங்களை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து செங்குன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரது மனைவியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அவரது செல்போனை ஆய்வுகள் மேற்கொண்டும் கடன் தொல்லை காரணமாக தமது மகனுடன் கடையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாரா ? அல்லது வேறு ஏதேனும் முன்விரதம் காரணமா ? என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றார் காவல் ஆய்வாளர் புருஷோத்தமன். தந்தை, மகன் ஆகிய இருவர் கடையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
What's Your Reaction?