அடிப்படை வசதிகள் நிறைவேற்றியதாக பொய்யான அறிக்கை தந்த சூலூர், கலங்கல் ஊராட்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் மீது நடவடிக்கை கோரி - கோவை ஆட்சியரிடம் மனு !!!
அடிப்படை வசதிகள் நிறைவேற்றியதாக பொய்யான அறிக்கை தந்த சூலூர், கலங்கல் ஊராட்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் மீது நடவடிக்கை கோரி - கோவை ஆட்சியரிடம் மனு !!!

அடிப்படை வசதிகள் நிறைவேற்றியதாக பொய்யான அறிக்கை தந்த சூலூர், கலங்கல் ஊராட்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் மீது நடவடிக்கை கோரி - கோவை ஆட்சியரிடம் மனு !!!
கோவை மாவட்டம், சூலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கலங்கல் ஊராட்சி கிராமத்தில், நான்காவது வார்டில் தென்றல் நகர் குடியிருப்பு பகுதி கடந்த 2015 ஆண்டு முதல் உருவாகி 165 க்கும் புதிய வீடுகள் கட்டி, குடி இருந்து வருகின்றனர், வீடுகளுக்கு உரிய சொத்து வரியும், குடிநீர், சாலை வசதி, கழிவுநீர் கால்வாய்க்கான வசதிகள் செய்து தருவதாக கலங்கல் ஊராட்சியில் வரி வசூல் செய்தனர், ஆனால் இது வரை எந்தவொரு அடிப்படை வசதிகள் தரமால் ஏமாற்றி வருவதாக பலமுறை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும், முறையான நடவடிக்கை எடுக்கவில்லை, இதனால் கலங்கல் ஊராட்சி, தென்றல் நகர் குடியிருப்பு மக்கள் முதல்வர் தனிப் பிரிவுக்கு மனு அளித்தனர், அதன்படி பதில் அளித்த சூலூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர், கலங்கல் ஊராட்சி கிராமத்தில் உள்ள தென்றல் நகர் குடியிருப்பு பகுதிக்கு முறையாக குடிநீர் வசதிகள் செய்து தந்ததாக அறிக்கை அனுப்பினார், இதனை கண்ட குடியிருப்பு மக்கள் அதிர்ச்சி அடைந்தவர்கள், இதை கண்டித்தும், பொய்யான அறிக்கையாக, அடிப்படை வசதிகளும், குறிப்பாக குடிநீர் வசதி கடந்த பத்து ஆண்டுகளாக செய்து தராமல், ஏமாற்றி வரும் சூலூர் ஊராட்சி ஒன்றியம் வட்டார வளர்ச்சி அலுவலர் மீது உரிய நடவடிக்கை எடுத்தும், கலங்கல் ஊராட்சி கிராமத்தில் உள்ள தென்றல் நகர் பகுதிக்கு மழை காலம் தொடங்கிய நிலையில் உடனடியாக குடிநீர் வசதி செய்து தரவும், சாலை, கழிவுநீர் கால்வாய் வசதிகள் செய்து தர வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர். தென்றல் நகர் குடியிருப்பு மக்கள் கூறுகையில் நாங்கள் பத்து ஆண்டுகளாக அடிப்படை வசதி இல்லாமல் வசதித்து வருகிறோம், மேலும் குடிநீர் வசதி கேட்டு பலமுறை மனு எந்த பலனும் இல்லை, தற்போது வட்டார வளர்ச்சி அலுவலர் குடிநீர் வசதி நிறைவேற்றியதாக பொய்யான அறிக்கை தந்தவரை நடவடிக்கை எடுத்து, மழை காலம் தொடங்கி விட்டதால், சாலையில் மழைநீர் தேங்கி நிற்பதால், துர்நாற்றம் வீசுகிறது, விஷப் பூச்சிகளால் பெண்கள், குழந்தைகளுக்கு அச்சம் அடைந்து உள்ளனர், எனவே பொய் அறிக்கை தந்த வட்டார வளர்ச்சி அலுவலர் மீது நடவடிக்கை எடுத்து, குடிநீர் வசதி செய்து தர வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.
What's Your Reaction?






