சமூக வலைத்தளத்தில் பதிவு செய்ய 12 லட்சம் செலவு ? : ரசீது போட்டு ஊழல் செய்யும் திண்டுக்கல் மாநகராட்சி - பா.ஜ.க உறுப்பினர் குற்றச்சாட்டு !!!

சமூக வலைத்தளத்தில் பதிவு செய்ய 12 லட்சம் செலவு ? : ரசீது போட்டு ஊழல் செய்யும் திண்டுக்கல் மாநகராட்சி - பா.ஜ.க உறுப்பினர் குற்றச்சாட்டு !!!

Oct 17, 2024 - 12:35
 0  6

சமூக வலைதளங்களில் பதிவு செய்வதற்கு 12 லட்சம் ரூபாய் மதிப்பில் பாதாள சாக்கடை தொட்டி மூன்றரை வருடங்களாக கட்டி தராத மாநகராட்சி அதிகாரிகள். அவர்கள் செய்யாத பணிகளுக்கு லட்ச, லட்சமாக ரசீது மட்டும் வைத்து கொள்ளையில் ஈடுபடுவதாக, 13 வது வார்டு உறுப்பினர் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் தனபாலன் லேப் டாப்வுடன் குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளார்.

திண்டுக்கல் மாநகராட்சி மாமன்ற கூட்டம் மாநகராட்சி மேயர் தலைமையில் இன்று மாநகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்றது.

கூட்டத்தில் 78 தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என தீர்மானங்கள் கூறப்பட்டு தீர்மானங்கள் அறிவிப்பு வெளியான பொழுது திண்டுக்கல் மாநகராட்சியின் 14 வது மாமன்ற உறுப்பினர் பாரதிய ஜனதா கட்சியின் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தலைவர் தனபாலன் கூட்ட அரங்கில் தனது 14 வது வார்டு பகுதியில் கடந்த மூன்று வருடங்களாக பாதாள சாக்கடை தொட்டி கட்டி தர வேண்டும் என தொடர்ந்து புகார் அளித்தும் இதுவரை மாநகராட்சி மேயர், துணை மேயர் அதிகாரிகள் என யாரும் நடவடிக்கை எடுக்க மறுக்கிறார்கள் என தான் கையில் கொண்டு வந்த லேப் டாப்பில் உள்ள படங்களை காண்பித்தார். எங்கள் பகுதி குண்டும், குழியுமாக சாலைகள் உள்ளது. பாதாள சாக்கடை தொட்டி அமைக்காததால் குடியிருப்பு பகுதிகளில் கழிவு நீர் செல்கிறது. தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகளும் மாமன்ற மேயரும் கண்டுகொள்ளவில்லை என கூறினார். இதனால் தி.மு.க உறுப்பினர்களுக்கும், பாரதிய ஜனதா கட்சியின் 14 வது வார்டு உறுப்பினர் தனபாலனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

தனது பகுதியில் உள்ள பிரச்சனைகளை கோஷமாகவும் எழுப்பத் துவங்கியதால் மாமன்ற கூட்ட அரங்கில் சலசலப்பு ஏற்பட்டது. மாமன்ற கூட்டத்தில் சரியான பதில் தரவில்லை முறையான மரியாதை இல்லை எனக் கூறி வெளிநடப்பு செய்தார்.

செய்தியாளர்களை சந்தித்தவர் :-

திண்டுக்கல் மாநகராட்சியில் ஊழல் அதிகமாக உள்ளது. தமிழக முதல்வர் தலையிட வேண்டும், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சரும் தலையிட வேண்டும், ஏற்கனவே 4 .1/2 கோடி ஊழல் நடந்து உள்ளதாக மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்து, தற்போது வரை எந்த ஒரு நடவடிக்கையும் இல்லாமல் அப்படியே உள்ளது.

இந்நிலையில் சமூக வலைதளங்களில் மாநகராட்சி பதிவுகளை பதிவு செய்வதற்கு வருடத்திற்க்கு ரூபாய் 12 லட்சமா ? மாநகராட்சி பணி செய்பவர்களுக்கே சம்பளம் வழங்காத மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு பணிகளை செய்ததாக கூறி ரசீதுகளை மட்டும் போட்டு லட்சம், லட்சமாக ஊழல் செய்து வருகிறது.

நேற்று வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநகராட்சி பகுதிகளில் கழிவுநீர் வாய்க்கால்களை தூர் வாருகிறோம் என்று 10 லட்ச ரூபாய் ஒதக்கப்பட்டு உள்ளதாகவும் கூறி அதிகாரிகளும் ஆய்வு செய்தனர். ஆனால் எங்களது பகுதியில் வந்து பாருங்கள் இரண்டடி கழிவு நீர் வாய்க்காலில் முழுவதுமாக மண் மூடி மழை பெய்தால் கழிவு நீரும், தண்ணீரும் சாலையில் செல்லும் அவல நிலை உள்ளது. மாநகராட்சி அதிகாரிகளும், மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள், மேயர் உள்ளிட்ட அனைவரும் ரசீது போட்டு ஊழல் மட்டும் செய்து வருகின்றனர் என்று கூறினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow