விவசாய நிலங்களில் உயிரிழந்து கிடந்த 14 மயில்கள் : தேசிய பறவை சில உயிருக்கு போராடிக் கொண்டு இருப்பதால் பரபரப்பு
விவசாய நிலங்களில் உயிரிழந்து கிடந்த 14 மயில்கள் : தேசிய பறவை சில உயிருக்கு போராடிக் கொண்டு இருப்பதால் பரபரப்பு
விவசாய நிலங்களில் உயிரிழந்து கிடந்த 14 மயில்கள் : தேசிய பறவை சில உயிருக்கு போராடிக் கொண்டு இருப்பதால் பரபரப்பு...
உயிரிழந்த மயில்களை மீட்டு விஷம் வைத்து கொல்லப்பட்டதா ? என போலீசார் விசாரணை
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள செட்டிகுறிச்சி கிராமத்தில் கந்தசாமி என்பவருக்கு சொந்தமான நிலம் உள்ளது. இந்த நிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே மயில்கள் இறந்து கிடந்து உள்ளன. அதே போன்று அங்குள்ள கிணறு ஒன்றில் ஐந்துக்கு மேற்பட்ட மயில்கள் உயிரிழந்து கிடந்து உள்ளன. மேலும் ஆங்காங்கே சில மயில்கள் அரை மயக்கத்தில் உயிருக்கு போராடிக் கொண்டு இருப்பதை பார்த்த பொதுமக்கள் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வனத் துறைக்கு தகவல் கொடுத்து உள்ளனர். 14 க்கும் மேற்பட்ட மையில்கள் உயிரிழந்த நிலையில் காணப்படுகின்றன. மேலும் சில மயில்கள் உயிருக்கு போராடிக் கொண்டு இருக்கின்றன. இதனை கைப்பற்றி வனத் துறையினர் மற்றும் காவல் துறையினர் மயில்கள் விஷம் வைத்துக் கொள்ளப்பட்டதா ? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அந்தப் பகுதியில் விவசாய நிலங்களில் மக்காச்சோள பயிர்கள் அதிகளவு பயிரிடப்பட்டு உள்ளது. மக்காச்சோள விதைகளை மயில்கள் அதிகளவு சாப்பிட்டு இருந்தாலும் ஜீரணமாகாமல் உயிரிழக்க வாய்ப்பு இருப்பதாகவும், இறந்து போன மயில்களை மருத்துவ பரிசோதனை செய்த பிறகு தான் மயில்கள் எப்படி இறந்தது என்பது முழுமையாக தெரியவரும் என்று வனத்துறையினர் தெரிவித்து உள்ளனர். 14 க்கு மேற்பட்ட தேசிய பறவை மயில்கள் அந்தப் பகுதியில் இறந்து கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.
What's Your Reaction?