தேனி, பெரியகுளத்தில் கழிவுநீர் வாய்க்கால் இல்லாததால் சாலை ஓரங்களில் தேங்கி கழிவு நீருடன் மழை நீர் : நோய் பரவும் அபாயத்தில் பொதுமக்கள் - கண்டு கொள்ளாத பேரூராட்சி நிர்வாகம் !!!
தேனி, பெரியகுளத்தில் கழிவுநீர் வாய்க்கால் இல்லாததால் சாலை ஓரங்களில் தேங்கி கழிவு நீருடன் மழை நீர் : நோய் பரவும் அபாயத்தில் பொதுமக்கள் - கண்டு கொள்ளாத பேரூராட்சி நிர்வாகம் !!!
சாலையில் தேங்கி கழிவு நீருடன் மழை நீர் : நோய் பரவும் அபாயத்தில் பொதுமக்கள் -கண்டு கொள்ளாத பேரூராட்சி நிர்வாகம் !!!
தேனி மாவட்டம், பெரியகுளம் தெங்கரை பேரூராட்சிக்கு உட்பட்ட பாரதி நகர் உள்ளது. இதில் புதிய பாரதி நகர் பகுதியில் பேரூராட்சி நிர்வாகம் சார்பாக கழிவுநீர் வாய்க்கால் அமைக்காததால் அப்பகுதியில் குடியிருக்கும் பொதுமக்கள் தங்கள் வீட்டு முன்பு சிறிய அளவில் டேங்க் அமைக்கப்பட்டு அதில் கழிவு நீரை தேக்கி வைத்து உள்ளனர். தற்போது மழைக் காலம் என்பதால் கழிவு நீர் தொட்டியில் கழிவு நீர் நிரம்பி வெளியே சாலையில் உள்ள மழை நீருடன் கலந்து சாலையில் தேங்கி நிற்பதால் அந்த வழியாகச் செல்லும் பொதுமக்கள் பள்ளி மாணவர்கள் மிகவும் சிரமப்பட்டு உள்ளனர். மேலும் இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகத்திடம் அப்பகுதி இப்பொழுது மக்கள் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது அப்பகுதி மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது.
இதில் கழிவு நீர் வாய்க்கால் அமைக்காததால் கழிவுநீர் செல்ல முடியாமல் வீட்டு முன்பு தேங்கி இருப்பதால் நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் மழைக் காலம் என்பதால் தற்போது பல்வேறு மர்ம நோய்கள் பரவி வரும் சூழ்நிலையில் குடியிருப்பு பகுதியில் மழை பெய்வதுடன் கழிவு நீர் கலந்து தேங்கி இருப்பதால் நோய் பரவும் அச்சத்துடன் அப்பகுதியில் பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
What's Your Reaction?






