மத்திய அரசு வடமொழிக்கு முக்கியத்துவம் போன்று தமிழ்மொழிக்கும் அளிக்க வேண்டும் - வி.ஐ.டி பல்கலைக் கழக நிறுவனத் தலைவர் பேச்சு !!!
மத்திய அரசு வடமொழிக்கு முக்கியத்துவம் போன்று தமிழ்மொழிக்கும் அளிக்க வேண்டும் - வி.ஐ.டி பல்கலைக் கழக நிறுவனத் தலைவர் பேச்சு !!!

மத்திய அரசு வடமொழிக்கு முக்கியத்துவம் போன்று தமிழ்மொழிக்கும் அளிக்க வேண்டும் - வி.ஐ.டி பல்கலைக் கழக நிறுவனத் தலைவர் பேச்சு !!!
மத்திய அரசு வடமொழிக்கு அளிக்கும் முக்கியத்துவம் போன்று தமிழ் மொழிக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று தர்மபுரியில் நடந்த விழாவில் விஐடி பல்கலைக் கழக நிறுவனத் தலைவர் கோ.விசுவநாதன் பேசினார்.
தமிழியக்கம் சார்பில் பெரியார், அண்ணா பிறந்த நாள் விழா தர்மபுரி பச்சமுத்து மகளிர் கலைக் கல்லூரியில் நடைபெற்றது. விழாவிற்கு தமிழியக்க நிறுவனத் தலைவரும், விஐடி பல்கலைக் கழக நிறுவன தலைவருமான கோ.விசுவநாதன் தலைமை வகித்து பேசினார். மாவட்ட செயலாளர் அதியமான் வரவேற்றார். பச்சமுத்து கல்வி நிறுவனங்களில் தலைவர் பாஸ்கர், சேலம் மண்டல செயலாளர் முல்லையரசு, மாவட்ட பொருளார் நரசிம்மன், இணை செயலாளர் உதயசூரியன், ஒருங்கிணைப்பாளர் பழனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழியக்க அமைப்பு செயலாளர் வணங்காமுடி, மாநில செயலாளர் சுகுமார், பொருளாளர் பதுமனார், பொதுச்செயலாளர் அப்துல்காதர் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். விழாவில் 1800 க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் பச்சமுத்து மகளிர் கலைக் கல்லூரி முதல்வர் நாகதீபா நன்றி கூறினார். விழாவின் முடிவில், தமிழியக்க நிறுவனத் தலைவரும், விஐடி பல்கலைக் கழக நிறுவன தலைவருமான கோ.விசுவநாதன் பேசும்போது :-
சமஸ்கிருதம், தமிழ், சீன மொழியும் கிழக்கு ஆசியாவில் மூத்த மொழிகள் ஆகும். சில மொழிகள், சமஸ்கிருதம் போல வழக்கில்லாமல் சென்றது. கிரேக்கம், இலத்தீன் மொழிகள் மாறி ஐரோப்பிய மொழிகளாக மாறிவிட்டன. உலகத்திலேயே மாறாமல் இருக்கக் கூடிய ஒரே மொழி தமிழ் மொழி தான். அப்படிப்பட்ட தமிழுக்கு நாம் சொந்தக்காரர்கள். தமிழர்கள் என்பதில் பெருமைப்பட வேண்டும். பெருமை பெற்றால் மட்டும் போதாது நாம் தமிழர்களாக வாழ வேண்டும். மற்றவர்களிடமிருந்து நாம் உயர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.
இந்தியாவிலேயே அதிகமாக பெண் விடுதலைக்கு பாடுபட்டவர் தந்தை பெரியார் தான். அறிஞர் அண்ணா அரசியல் நாகரிகத்தை கடைப்பிடித்தார். ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு முன் உதாரணமாக அண்ணா இருந்தார். தமிழியக்கம் எல்லோருக்கும் பொதுவான இயக்கம். சாதி, மதம், கட்சிக்கு அப்பாற்பட்ட இயக்கம் தமிழியக்கம். தமிழர்கள் ஒன்றுபட வேண்டும். தங்களுடைய பெருமையை உணர வேண்டும். தமிழர்கள் நன்றாக வளர வேண்டும். தமிழன் நல்லவராக இருக்க வேண்டும். வல்லவராகவும் இருக்க வேண்டும். இதுதான் தமிழியக்கத்தின் நோக்கம். இந்த இயக்கம் கல்வி வளர்ச்சி நோக்கம் கொண்டது. குறிப்பாக பெண் கல்வி வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கக்கூடிய இயக்கமாகும். பச்சமுத்து பாஸ்கர் செய்து வரும் சேவையை பாராட்டுகிறேன். தமிழ்நாடு முழுவதும் ஏழை,எளிய, நடுத்தர மக்களின் மாணவ, மாணவிகள் எல்லோருக்கும் கல்வி கிடைக்க வேண்டும். மத்திய, மாநில மற்றும் தனியார் கல்வி நிலையங்களில் இதற்காக பாடுபட வேண்டும். உயர் கல்வியில் இந்தியா பின்தங்கி உள்ளது. மாநிலங்களவில் தமிழகம் உயர் கல்வியில் முதலிடத்தில் உள்ளது. ஆனாலும் இது போதாது. இன்னும் உயரவேண்டும். ஒன்றிய அரசு வடமொழிக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை தமிழுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். குறிப்பாக, ஒன்றிய அரசின் விமானத்துறை உள்ளிட்ட நிறுவனங்களில் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். தர்மபுரி பச்சமுத்து மகளிர் கலை கல்லூரியில் படிக்கும் இளநிலை, முதுநிலையில் முதலிடம் பெரும் மாணவிகளுக்கு விஐடி நிறுவனம் சார்பில் தங்க பதக்கம் வழங்கப்படும் என்றார்.
What's Your Reaction?






