மின் மயானம் அமைக்க இடம் ஆய்வு செய்ய சென்ற தி.மு.க வை ஊராட்சி மன்ற தலைவர் : ஊர்மக்கள் அடித்து விரட்டி துரத்திய வீடியோ வைரலாகி வருகிறது .
மின் மயானம் அமைக்க இடம் ஆய்வு செய்ய சென்ற தி.மு.க வை ஊராட்சி மன்ற தலைவர் : ஊர்மக்கள் அடித்து விரட்டி துரத்திய வீடியோ வைரலாகி வருகிறது .
மின் மயானம் அமைக்க இடம் ஆய்வு செய்ய சென்ற தி.மு.க வை ஊராட்சி மன்ற தலைவர் : ஊர்மக்கள் அடித்து விரட்டி துரத்திய வீடியோ வைரலாகி !!!
கன்னியாகுமரி, மாவட்டம் ஞாலம் ஊராட்சி பகுதி இயற்கை எழில் மிகுந்த பகுதி . அடிப்படை வசதிகள் நிறைந்த இந்த கிராமங்களில் மின் மயானம் (சுடுகாடு) திட்டம் கொண்டு வர அரசு தரப்பில் திட்டமிடப்பட்டு அதனை செயல்படுத்த அதிகாரிகள் தரப்பில் இடம் தேர்வு செய்ய சென்ற போது ஊர் மக்கள் எதிர்ப்பு காரணமாக அதிகாரிகள் திரும்பி வந்து விட்டனர். இதனால் ஊர் மக்கள் கடந்த மாதம் திரண்டு வந்து நாகர்கோவிலில் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தங்கள் வாக்காளர் அட்டைகளையும் மாவட்ட ஆட்சியர் அழகு மீனாவிடம் ஒப்படைத்து விட்டு தங்கள் எதிர்ப்பை தெரிவித்து சென்றனர். இந்நிலையில் நாகர்கோவில் மாநகராட்சி மேயரும் , குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க செயலாளருமான மகேஷ் தலைமையில் தி.மு.க கட்சியின் அப்பகுதி ஊராட்சி மன்ற தலைவர்களும் இடம் ஆய்வு செய்ய சென்றனர். ஊர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க வை சேர்ந்த தடிக்காரன் கோணம் ஊராட்சி மன்ற தலைவர் பிராங்கிளினை ஊர் மக்கள் ஒட, ஒட அடித்து விரட்டிய வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது . இது குறித்து பூதப்பாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
What's Your Reaction?