இத்தாலி நாட்டு சுற்றுலா பயணிகள் : வெகுவாக கவர்ந்த ஆட்டோ ஓட்டுனர்கள் ஆயுத பூஜை விழா - வியப்புடன் செல்போன்களில் புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்தனர் !!!

வாலாஜாபாத்தில் நடந்த ஆட்டோ ஓட்டுனர்களின் ஆயுத பூஜை விழாவை வியப்புடன் கண்ட இத்தாலி நாட்வைச்சேர்ந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தங்களது செல்போன்களில் புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்தனர்.
சால்வை அணிவித்து கெளரவிப்பு செய்த அ.தி.மு.க வினர்...
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பேரூராட்சிக்கு உட்பட்ட ரவுண்டானா பகுதியில் வாலாஜாபாத் ரவுண்டானா டாக்டர் அம்பேத்கர் நல சங்கம் சார்பில் ஆயுத பூஜை விழா வெகு விமர்சையாக நடைபெற்றதில் அதில் அ.தி.மு.க கழக அமைப்பு செயலாளர்
வாலாஜாபாக் கணேசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பூஜை செய்து 50 க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஹாட் பாக்ஸ் உள்ளிட்ட நலத் திட்ட உதவிகளை வழங்கினார்.
அப்போது அவ்வழியாக சென்ற இத்தாலி நாட்டு சுற்றுலாப் பயணிகள் தமிழர்களின் ஆட்டோ ஓட்டுனரகளின் ஆயுத பூஜை விழாவை கண்டு வியந்து தங்களது செல்போன்களில் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
அவர்களுக்கு அ.தி.மு.க கழக அமைப்புச் செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன் சால்வை அணிவித்து உற்சாகப்படுத்தினார்.
இந்த நிகழ்வில் அ.தி.மு.க வாலாஜாபாத் கிழக்கு ஒன்றிய செயலாளர் அக்ரி நாகராஜ், மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் சி.கலைமணி, கிழக்கு ஒன்றிய இளைஞரணி செயலாளர் கே.எஸ்.கார்த்திக், ஒன்றிய துணை செயலாளர் அங்கம்பாக்கம் வரதராஜன், அம்பேத்கர் ஆட்டோ ஓட்டுனர் சங்க தலைவர்,செயலாளர், பொருளாளர் துணை தலைவர், சங்க உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்பு.
What's Your Reaction?