கோவில்பட்டியில் 2 மணி நேரத்திற்கு மேலாக வெளுத்து வாங்கிய மழை - வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் மக்கள் அவதி

கோவில்பட்டியில் 2 மணி நேரத்திற்கு மேலாக வெளுத்து வாங்கிய மழை - வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் மக்கள் அவதி

Oct 24, 2024 - 19:51
 0  4
கோவில்பட்டியில் 2 மணி நேரத்திற்கு மேலாக வெளுத்து வாங்கிய மழை - வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் மக்கள் அவதி
கோவில்பட்டியில் 2 மணி நேரத்திற்கு மேலாக வெளுத்து வாங்கிய மழை - வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் மக்கள் அவதி

கோவில்பட்டியில் 2 மணி நேரத்திற்கு மேலாக வெளுத்து வாங்கிய மழை - வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் மக்கள் அவதி !!!

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி நகர் மற்றும் சுற்று வட்டார பகுதியில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக பலத்த மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக கோவில்பட்டி நகரில் முக்கிய சாலைகளில் மழைநீர் வெள்ளப் பெருக்கெடுத்து ஓடியது. இளையரசனேந்தல் ரயில்வே சுரங்க பாலத்தில் மழை நீர் தேங்கியதால் அந்தப் பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகே உள்ள சாலையில் அதிகமான அளவு தண்ணீர் சென்றதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துடன் சென்றனர். இந்த நிலையில் பலத்த மழையின் காரணமாக கோவில்பட்டி ராஜீவ் நகர் ஆறாவது தெரு பகுதியில் தெருக்கள் முழுவதும் மழை நீர் தேங்கி இருந்ததால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் தங்கள் வீடுகளுக்கு செல்ல மிகுந்த சிரமம் அடைந்தனர். மேலும் 6 வது தெருவில் உள்ள சில வீடுகளில் மழைநீர் உள்ளே சென்றதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். தேங்கிய மழை நீரை வீட்டில் இருந்த பாத்திரங்களை வைத்து பொதுமக்களே இறைத்து வெளியேற்றினர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow