பாரம்பரிய அரிசியில் பலகாரங்கள் : பழமை மாறாமல், புதுமை புகாமல் - புராட்சி செய்யும் புதுமை பெண்கள் !!!
பாரம்பரிய அரிசியில் பலகாரங்கள் : பழமை மாறாமல், புதுமை புகாமல் - புராட்சி செய்யும் புதுமை பெண்கள் !!!

பாரம்பரிய அரிசியில் பலகாரங்கள் : பழமை மாறாமல், புதுமை புகாமல் - புராட்சி செய்யும் புதுமை பெண்கள் !!!
பாரம்பரிய உணவிற்க்கு மீண்டும் திரும்பும் பொதுமக்கள் .
வேலூர் மாவட்டம் காட்பாடியை மையமாக கொண்டு ,"மகளிர் விவசாயம் சார் தொழில் முனைவோர் இணையம்" இயங்கி வருகிறது. இதில் வேலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 21 மகளிர் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்கள் அழிவின் விளிம்பில் உள்ள நம் பாரம்பரிய அரிசி வகைகளை கண்டெடுத்து அவற்றின் மதிப்பு கூட்டி பல்வேறு பலகாரகங்கள் மற்றும் தின்பண்டங்களை தயாரித்து பொது மக்களுக்கு விற்பனை செய்து, நம் பாரம்பரிய அரிசி வகைகள் குறித்து பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
தற்போது தீபாவாளி பண்டிகையொட்டி கருப்புகவுனி அதிரசம், மாப்பிள்ளை சம்பா அதிரசம், இரத்த சாலி அப்பம், வரகு முருக்கு, பல தானிய லட்டு, கேழ்வரவு லட்டு, குள்ளங்கார் தட்டை, திணை முருக்கு, மற்றும் கருப்பு கவுனி முருக்கு என 20 க்கு மேற்ப்பட்ட தீபாவாளி பலகாரங்களை பழமை மாறமால் புதுமை புகாமல் விறகு அடுப்பில் மர செக்கு எண்ணெய் மூலம் செய்து மக்களுக்கு விற்பனை செய்து வருகின்றனர். மக்களும் பழமையான பாரம்பரிய அரிசி பலகாரகங்களின் புதுமையான ருசியை விரும்பி சுவைத்து வருகின்றனர்.
இது குறித்து இந்த மகளிர் குழவின் செயலாளர் மாலதி கங்காதரன் கூறும் பொழுது :-
பாரம்பரிய அரிசி மற்றும் அதன் மதிப்பு கூட்டி செய்யப்படும் பொருட்களுக்கு தற்போது மக்கள் இடையே பெரும் வரவேற்ப்பு ஏற்ப்பட்டு உள்ளது. மக்கள் போட்டி போட்டு வாங்கி செல்கின்றனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடத்தப்பட்ட பாரம்பரியம் மற்றும் இயற்க்கை விளை பொருட்கள் கண்காட்சியில் நாங்கள் 3-ம் பரிசினை பெற்றோம். கோட்டை மைதானத்தில் நடைபெற்ற புத்தக கண்காட்சியில் எங்கள் பாரம்பரிய உணவின் சுவை மற்றும் அதில் உள்ள இயற்க்கை சத்தின் அருமை உணர்ந்து அந்த 45 நாட்களும் அங்கு வரும் VI P உள்பட அனைவருக்கும் நாங்கள் பாரம்பரிய உணவுகளை வழங்கி பாரம்பரிய உணவு குறித்து பள்ளி குழந்தைகள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பாரம்பரிய உணவுகள் குறித்து பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளோம்.
இதனால் எங்களுக்கு பெரிய மன திருப்தி மற்றும் பொருளாதார ரீதியாக எங்களுக்கு எங்கள் கணவரின் வருமானத்தை எதிர்பாரமல் அவருக்கு நாங்கள் உதவும் நிலையில் உள்ளோம் என்றார்.
சிப்பாய் கலகம் உள்பட பல்வேறு விஷயங்களில் வேலூர் மாவட்டம் முதன்மையாக விளங்கி வருகிறது, இதன் தொடர்ச்சியாக அழிந்து வரும் பாரம்பரிய அரிசி மற்றும் இயற்கை விளை பொருட்கள் சிறு தானியங்கள் ஆகியவற்றை மீட்டெடுப்பதில் வேலூர் மாவட்டம் முன் உதாரணமாக இருக்கும் .
What's Your Reaction?






