நீர் வழிப் பாதையை ஆக்கிரமிப்பு : குற்றவியல் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியரிடம் மனு - புரட்சி பாரதம் எஸ்வந்த் ராவ் !!!

நீர் வழிப் பாதையை ஆக்கிரமிப்பு : குற்றவியல் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியரிடம் மனு - புரட்சி பாரதம் எஸ்வந்த் ராவ் !!!

Oct 14, 2024 - 19:56
 0  15

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

அனைத்து அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்ட இக்கூட்டத்தில் இலவச வீட்டு மனை பட்டா கோருதல், பட்டா மாறுதல், மின்சார வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உட்பட பல்வேறு கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டது.

அதில், காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியம் ஊத்துக்காடு கிராமத்தில் புல எண்.519 வண்டிப் பாதையானது ஊத்துக்காட்டில் இருந்து ஊர் தாங்கள், துலுக்கன்தாங்கள் வழியாக ஒட்டன்தாங்கள் கிராமம் வரை அந்த காலத்தில் மழை நீரோடு மாட்டு வண்டிகள் விவசாய இடு பொருட்களை ஏற்றிக் கொண்டு செல்வதற்காக பயன்பட்டது என்றும், பின்னர் ஊத்துக்காடு குளங்களில் மற்றும் சிறு சிறு குட்டைகள் அகழிகளில் இருந்து வெளியேறும் உபரி நீரானது இந்த வண்டி பாதை வழியாகத் தான் 6 கிராமங்கள் வழியாக ஒட்டன் தாங்கள் சென்று கலக்கும் என்றும், ஆனால் இந்த வண்டி பாதையை ரியல் எஸ்டேட் அதிபர்கள் கிராமத்தில் உள்ள சிலரின் உதவியோடு ஜே.சி.பி எந்திரம் மூலம் அங்கு இருந்த பனை மரங்கள் அனைத்தையும் அகற்றி, வண்டி பாதையை சேதப்படுத்தி சாலை அமைத்து வருவதாகவும் இது குறித்து ஊத்துக்காடு கிராம நிர்வாக அலுவலர் புருஷோத்தமன் அவர்களிடம் தொலைபேசி மூலம் புகார் அளித்ததாகவும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், மறுநாள் தான் மீண்டும் புருஷோத்தமன் அவர்களை தொடர்பு கொள்ள முயற்சித்த போது தனது செல்போன் எண்ணை அவர் பிளாக் செய்து விட்டதாகவும், இந்த இடத்தை தற்போது சேதப்படுத்தி சாலை அமைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, சாலையை பழைய நிலைமைக்கு கொண்டு வந்து மழைநீர் செல்ல ஏதுவாக இருக்கும் படி செய்யுமாறு கோரிக்கை மனுவை புரட்சி பாரதம் ஒன்றிய செயலாளர் எஸ்வந்த் ராவ் அவர்கள் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகனிடம் கோரிக்கை மனு வழங்கினார்.

பெறப்பட்ட மனுக்களை பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்க சம்மந்தப்பட்ட அரசு அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.

இக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேசன் உள்ளிட்ட அனைத்து துறை அரசு அலுவலர்களும் கலந்துக் கொண்டனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow